முன்னாள் மாநிலங்களவை எம்.பி. சந்தன் மித்ரா காலமானார்

MP Passed Away Rajya Sabha
By Thahir Sep 02, 2021 04:42 AM GMT
Report

முன்னாள் மாநிலங்களவை எம்.பி.யும்,மூத்த பத்திரிகையாளருமான சந்தன் மித்ரா நள்ளிரவு காலமானார்.

முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரும்,மூத்த பத்திரிகையாளருமான சந்தன் மித்ரா புதன்கிழமை(நேற்று) நள்ளிரவு காலமானார்.

அவருக்கு வயது 66.இதனை, அவரது மகன் குஷன் மித்ரா செய்தி நிறுவனமான ஏஎன்ஐக்கு தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து,அவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.அந்த வகையில்,சந்தன் மித்ரா அவர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து,மாநிலங்களவை எம்பி ஸ்வபன் தாஸ்குப்தா ட்விட்டரில் தனது நெருங்கிய நண்பரை இழந்ததாக கூறினார். 1972 இல் பள்ளிப் பருவத்தின்போது எடுத்த ஒரு புகைப்படத்தை வெளியிட்ட எம்பி தாஸ்குப்தா கூறியதாவது:

"எனது நெருங்கிய நண்பர் - முன்னோடி ஆசிரியர் மற்றும் முன்னாள் எம்.பி சந்தன் மித்ராவை இன்று காலை இழந்தேன். நாங்கள் லா மார்டினியரின் மாணவர்களாக ஒன்றாக இருந்தோம் .

செயின்ட் ஸ்டீபன் மற்றும் ஆக்ஸ்போர்டுக்குச் சென்றோம். நாங்கள் ஒரே நேரத்தில் பத்திரிகைத் துறையில் சேர்ந்தோம்,அயோத்தியின் உற்சாகத்தையும், காவி அலையையும் பகிர்ந்து கொண்டோம்.

நான் 1972 இல் பள்ளி பயணத்தின் போது சந்தன் மித்ராவும் நானும் ஒன்றாக இருந்த புகைப்படத்தை வெளியிடுகிறேன். நீங்கள் எங்கிருந்தாலும் மகிழ்ச்சியாக இருங்கள். ஓம் சாந்தி",என்று பதிவிட்டுள்ளார்.