பிக்பாஸ் வீட்டை படமாக எடுத்தால் யார் ஹீரோ, ஹீரோயின் தெரியுமா? - ராஜூ சொன்ன பதில் இதோ
பிக் பாஸ் வீட்டை படமாக எடுத்தால் அதில் யார், யாரை ஹீரோ, ஹீரோயினாக நடிக்க வைப்பேன் என்ற கேள்விக்கு சக போட்டியாளர் ராஜூ பதிலளித்துள்ளார்.
நடிகர் கமல் தொகுத்து வழங்க விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசன் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது.கடந்த வாரம் தாமரை வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் ராஜு, பிரியங்கா, அமீர், நிரூப், பாவனி ஆகியோர் இறுதிப் போட்டிக்கான போட்டியாளர்களாக உள்ளனர்.
இதனிடையே நேற்றை எபிசோடில் பழைய போட்டியாளர்களான நாடியா, சுருதி, அபிநய் மற்றும் சிபி ஆகியோர் வீட்டிற்குள் வருகை தந்தனர். மேலும் சிபி மற்றும் அபிநய் அங்கு அமைக்கப்பட்டிருந்த ரேடியோ ஸ்டேஷனில் அமர்ந்து பேச ஆரம்பிக்கின்றனர். அப்போது BB ரேடியோ ஸ்டேஷனின் ஆர்ஜே-வாக இருக்கும் சிபி ராஜுவிடம் ஒரு கேள்வி கேட்கிறார்.
அதில் பிக்பாஸ் வீட்டை படமாக எடுக்க நினைத்தால், அதில் யாரை ஹீரோ, ஹீரோயின் மற்றும் வில்லனாக தேர்ந்தெடுப்பீர்கள் என கேட்கிறார். அதற்கு பதிலளித்த ராஜு, " இந்த படத்திற்கு ஹீரோவாக சிபியை போடுவேன். ஹீரோயின்ஸ் இந்த படத்தில் அதிகம் இருக்கிறார்கள். அதில் ஒன்னு இந்த ஆண்ட்டி என்று பிரியங்காவை பார்த்துசொல்கிறார். பின்னர், பாவனி, சுருதி, அக்ஷரா ஆகியோர் இருப்பார்கள். இது ஒரு பேய் படம். ஒவ்வொருத்தர் மேலையா பேய் வரும் என சொல்கிறார்.