'முத்து' பட நடிகையா இது ? அதிர்ச்சி கொடுத்த லேட்டஸ்ட் போட்டோ!

Rajinikanth Tamil Cinema Actress
By Vidhya Senthil Sep 11, 2024 12:31 PM GMT
Report

 முத்து படத்தில் பத்மினி என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் நடிகை சுபஸ்ரீ.

 முத்து

இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் 1995 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் முத்து. இத்திரைப்படத்தில் கே. எஸ். ரவிக்குமார் இயக்க, ரஜினிகாந்த், மீனா, ரகுவரன், சரத் பாபு, ராதா ரவி, செந்தில் மற்றும் வடிவேலு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் .

subha sri

மேலும் இந்த படத்திற்கு ஏ. ஆர். ரகுமான் இசையமைத்திருந்தார். இது மலையாளத் திரைப்படம், தேன்மாவின் கொம்பது படத்தின் ரிமேக் ஆகும். இந்த படம் ரஜினிகாந்த் திரை வாழ்க்கையில் பிரம்மாண்ட வெற்றி கொடுத்த முக்கிய படமாக அமைந்தது.

நான் adjustment கேட்டு பலர் வந்தனர்; அப்போ அமைதியா இருந்திட்டு...பிரபலம் ஓபன்டாக்!

நான் adjustment கேட்டு பலர் வந்தனர்; அப்போ அமைதியா இருந்திட்டு...பிரபலம் ஓபன்டாக்!

இந்த படத்தின் அனைத்து பாடல்களும் தற்போது வரை மக்களின் மனங்களில் நீங்காமல் நிற்கிறது. முத்து படத்தில் பத்மினி என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் நடிகை சுபஸ்ரீ.

லேட்டஸ்ட் போட்டோ

90களில் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் நடித்துள்ளார் . தமிழில் ஜென்டில்மேன் மற்றும் முத்து திரைப்படம் மூலம் பிரபலமானார். அதன்பிறகு திரைத்துறையில் நான்கு ஆண்டுகள் பயணித்த அவருக்குப் படவாய்ப்புகள் இல்லாததால் 1997ம் திரைத்துறையிலிருந்து விலகினார்.

 

தற்பொழுது நடிகை சுபஸ்ரீயின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த படத்தைப் பார்த்த நெட்டிசன்கள் அமைதியடைந்துள்ளனர் .