திமுகவுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும்: ராஜ்நாதி சிங் சூளுரை
பெண்களை இழிவுபடுத்தி பேசிய திமு.க.வை தோற்கடித்து தமிழக மக்கள் பாடம் புகட்ட வேண்டும் என ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார். ஊட்டியில், பா.ஜ.க வேட்பாளர் போஜராஜனை ஆதரித்து மத்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் ஊட்டி ஏ.டி.சி.யில் பிரசாரம் செய்தார்.
பிரசாரத்தில் ராஜ்நாத் சிங் பேசியதாவது, “கொரோனா தொற்று காலத்தில் மத்திய அரசு எடுத்த துரித நடவடிக்கையால் மக்கள் பாதிப்பிலிருந்து பாதுகாத்து கொள்ள முடிந்தது. இந்தியா, 72 நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றுமதி செய்து கொண்டிருக்கிறோம்.

அ.தி.மு.க. - பா.ஜ.க கூட்டணியால் தமிழகம் வளர்ச்சியடைந்துள்ளது. காங்கிரசுடன் தி.மு.க., கூட்டணி வைத்திருப்பது அவர்களுக்கு ஆஸ்தமானதாகும். பெண்களை இழிவுப் படுத்தி பேசிய ராஜாவை கண்டிக்கிறேன். தமிழக மக்கள் தி.மு.கவை தோற்கடித்து தக்க பாடம் புகட்ட வேண்டும். இன்னும், 5 ஆண்டுகளில், 50 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்படும்.
மூடப்பட்ட எச்.பி.எப்., தொழிற்சாலையில் ஐ.டி. பார்க் உருவாக்கப்படும்.
குடிசை வீடுகள் எல்லாம் கான்கிரீட் வீடுகளாக மாற்றப்படும். தேயிலைக்கு குறைந்த பட்ச ஆதார விலை கிலோவுக்கு 30 ரூபாய் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். படுகர் மக்களை எஸ்.டி., பட்டியலில் சேர்ப்பது குறித்தும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.