சத்தியபாமா காதில் சொன்னது என்ன? அமைச்சர் ராஜ்மோகன்

Rajmohan Arumugam
By Fathima Oct 01, 2026 06:19 AM GMT
Report

தாராபுரத்தில் நடந்த பிரசாரத்தின் போது வேட்பாளர் சத்தியபாமாவிடம் பேசியது என்ன என்பது குறித்து அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம் அளித்துள்ளார்.

தாராபுரத்தில் தவெக வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்து முதலமைச்சர் ஜோசப் விஜய் பிரசாரம் மேற்கொண்டார்.

இதன்போது வேட்பாளர் சத்தியபாமா பேசுகையில், அமைச்சர் ராஜ்மோகன் அவரது காதோரம் ஏதோ தெரிவித்தார்.

இந்த வீடியோ காட்சிகள் வெளியாகி விமர்சனங்களை பெற்று வந்தது.

சத்தியபாமா காதில் சொன்னது என்ன? அமைச்சர் ராஜ்மோகன் | Rajmohan Sathyabama Dharapuram

இந்நிலையில் அவர் பேசியது குறித்து விளக்கம் அளித்துள்ள ராஜ்மோகன், மக்கள் வெகுநேரமாக காத்துக்கொண்டிருப்பதால் உரையை விரைந்து முடிக்குமாறு கூறியதாக தெரிவித்துள்ளார்.

மேலும் ஒரு பெண்ணின் கண்ணீரை அரசியல் காரணத்துக்காக தவறாக சித்தரிக்க வேண்டாம் எனவும் தெரிவித்தார்.