கைதாவதற்கு முன்பு ஜேம்ஸ் பாண்ட் வசனம் பேசிய ஷில்பா ஷெட்டி கணவர்: வைரலாகும் வீடியோ!

நீங்கள் பீரங்கி டேங்கராக இருந்தால் உங்களை யாரும் தடுக்க முடியாது என ஜேம்ஸ் பாண்ட் வேடத்தில் ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா கைது செய்யப்படுவதற்கு முன்னர் பதிவிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா. இவர் பிரிட்டன் தொழிலதிபர். இவர் வெப் சீரிஸ் தயாரிக்கும் நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் ராஜ் குந்த்ரா ஆபாச படங்களை தயாரித்து குறிப்பிட்ட செயலிகளில் பதிவேற்றம் செய்து சம்பாதித்து வருவதாக கடந்த பிப்ரவரி மாதம் குற்றச்சாட்டு எழுந்தது.

இது குறித்து போலீஸார் நடத்திய விசாரணையில் ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவுக்கு  தொடர்பு இருப்பது தெரியவதுள்ளது.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவு ராஜ் குந்த்ரா உள்பட 9 பேரை மும்பை குற்றப்பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

ராஜ் குந்த்ரா கைது செய்யப்படுவதற்கு முன்னர் இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோ பதிவிட்டுள்ளார் அதில் ஜேம்ஸ் படத்தின் காட்சிகளும் வசனமும் இடம்பெற்றுள்ளன.

அதில் ஜேம்ஸ் பாண்டின் முகத்திற்கு பதில் ராஜ் குந்த்ராவின் முகம் வைக்கப்பட்டு பாண்ட், நீங்கள் பீரங்கி டேங்கராக இருந்தால் உங்களை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என குறிப்பிட்டு அந்த வீடியோவை பதிவிட்டுள்ளார்.

மேலும் சாலை தடுப்புகள் தற்காலிகமானதுதான். எதுவும் உங்களை தடுக்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்

ஒருவேளை ஜேம்ஸ் பட வீடியோவை பதிவு செய்ததற்காக ராஜ் குந்த்ரா கைது செய்யப்பட்டாரா என்ற கேள்வியை  கிண்டலாக கேள்வி எழுப்பி வருகின்றனர் நெட்டிசன்கள் 

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்