விராட் கோலின்னா யார்ன்னு தெரியாம பேசுறீங்க...சொல்லிட்டேன் - எச்சரிக்கை விடுக்கும் பயிற்சியாளர்
விராட் கோலியின் உண்மையான குணத்தை பிசிசிஐ இன்னும் புரிந்துக்கொள்ளவில்லை என அவரது சிறுவயது பயிற்சியாளர் கூறியுள்ளார்.
இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி நீக்கப்பட்டதின் பின்னணியில் உள்ள உண்மை தகவலை அறிய ரசிகர்கள் காத்திருக்கின்றனர். சமீபத்தில் இதுகுறித்து பேசியிருந்த விராட் கோலி, பிசிசிஐ மீதும், அதன் தலைவர் கங்குலி மீதும் மறைமுக குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தார்.
டி20 கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விலகியபோதே, வேண்டாம் என பிசிசிஐ அதிகாரிகள் கோரியதாகவும், அதனை அவர் கேட்கவில்லை என்றும் கங்குலி கூறியிருந்தார். ஆனால் அப்படி யாருமே தன்னிடம் கேட்கவில்லை. ஒருநாள் அணியின் கேப்டன்சியில் கூட நீக்கப்பட இருப்பதாக கடைசி நேரத்தில் தான் தகவல் தெரிவிக்கப்பட்டதாக விராட் கோலி பகிரங்கமாக தெரிவித்தார். இதனால் யார் கூறுவது பொய்? என ரசிகர்கள் குழம்பி போயினர்.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து கோலியின் சிறுவயது பயிற்சியாளர் ராஜ்குமார் சர்மா கருத்து தெரிவித்துள்ளார். இந்திய அணி தற்போது சிறப்பாக செயல்படுகிறது. இப்படிபட்ட நேரத்தில் தேவையில்லாத சர்ச்சைகள் எழும் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. விராட் கோலி எதற்கும் பேராசை படமாட்டார். இரு தரப்பினரும் வலுவான வார்த்தைகளை பயன்படுத்தக் கூடாது. பிசிசிஐ சூழ்நிலையை சிறப்பாக கையாண்டு, பாதகமில்லாத முடிவினை எடுக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
இப்பிரச்சினையில் கோலி - பிசிசிஐ இடையே எந்தவித ஒளிவுமறைவின்றி பேசிக்கொண்டால் எல்லாம் சரியாகிவிடும். விராட் கோலி எப்போதுமே விளையாடாமல் இருக்க வேண்டும் என்று நினைத்ததே கிடையாது. மகளின் பிறந்தநாள் வருவதால் விடுமுறை கேட்டிருப்பாரே தவிர விளையாடக்கூடாது என்று நினைத்திருக்க மாட்டார் என ராஜ்குமார் சர்மா கூறியுள்ளார்.