இவ்வளவு கல் நெஞ்சுகாரரா நடிகர் ராஜ்கிரண் - பெற்றோர் இறப்பிற்கு கூட வரவில்லையாம்..!
தமிழ் சினிமாவில் ஆரம்ப காலத்தில் தயாரிப்பாளராகவும், திரைக்கதை ஆசிரியராகவும் அறிமுகமானவர் ராஜ்கிரண்.
பெற்றோர் இறப்பிற்கு கூட செல்லாத ராஜ்கிரண்
பின்னர் முதன்முதலாக என் ராசாவின் மனசிலே என்ற திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். இந்த படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது.
இதையடுத்து அவருக்கு தமிழ்சினிமாவில் பட வாய்ப்புகள் அவரை தேடி வந்தன. ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியில் பிறந்தவர் தான் ராஜ்கிரண். இவருக்கு அந்த ஊரில் சொந்த வீடும் உள்ளது.
இந்த வீட்டில் அவரது முன்னாள் மனைவியும், மகளும் உள்ளனர். கீழக்கரைக்கு ராஜ்கிரண் வந்து சுமார் 25 வருடங்கள் ஆகிறதாம். அவரது பெற்றோர் இறப்பிற்கு கூட ராஜ்கிரண் வரவில்லை என்பது வேதனையின் உச்சம்.
தோல்வி அடுத்து வெற்றி
மேலும் அவருக்கு யாரும் அவரது சொந்த ஊரில் மரியாதை கொடுப்பதில்லையாம். இந்த நிலையில் ராஜ்கிரண் நடித்த மாணிக்கம் திரைப்படம் மிக மோசமான தோல்வியை சந்தித்தது.
இத்திரைப்படம் மிகப் பெரிய தோல்வியை அடைந்ததால் அவருக்கு மிகப் பெரிய இழப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து நீண்ட காலமாக திரைப்பட வாய்ப்பு கிடைக்காமல் இருந்து வந்த ராஜகிரணுக்கு இயக்குநர் பாலா தயாரிப்பில் நந்தா எனும் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
இதன் மூலம் தமிழ் சினிமாவில் மீண்டும் பயணிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.
இதை தொடர்ந்து சண்டக்கோழி, பவர் பாண்டி போன்ற திரைப்படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றது. பவர் பாண்டி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் நிறைய விருதுகளை பெற்றார்.