15வயதில் நடு ரோட்டில் மீனா உடை மாற்றுவார்; இதற்கு காரணம் அவரின் அம்மா - பிரபல நடிகர் பளீச்!
என் ராசாவின் மனசிலே என்ற படத்தின் படப்பிடிப்பு அனுபவங்களை குறித்து ராஜ்கிரண் பேசியுள்ளார்.
நடிகை மீனா
90ஸ்'களில் பலரின் கனவுக் கன்னியாக வளம் வந்தவர் நடிகை மீனா. 1982ம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக சிவாஜி நடித்த நெஞ்சங்கள் என்ற திரைப்படத்தின் முதன் முறையாக நடித்தார் . 1990ல் ஒரு புதிய கீதை என்ற தமிழ் படம் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார்.
ரஜினி,கமல்,அஜித்,என அனைத்து முன்னணி ஹீரோக்களுக்கும் ஜோடியாக நடித்திருக்கிறார்.தமிழ், தெலுங்கு,கன்னடம், மலையாளம் என அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் நடித்திருக்கிறார். இவரும் ரஜினியும் இனைந்து நடித்த முத்து என்ற படம் வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. ஜப்பானிலும் வெளியாகி அங்குள்ள ரசிகர்களையும் கவர்ந்தார் மீனா. தற்போது தமிழ் சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
இவர் தமிழில் கடைசியாக 2021ல் ரஜினியின் அண்ணாத்த என்ற படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் இவரின் 40 வருடமாக திரை வாழ்க்கையை கொண்டாடும் வகையில் பிரபல யூடியூப் சானெல் ஒன்று 'மீனா 40' என்ற நிகழ்ச்சியை நடத்தியிருந்தனர். அதில் மீனாவை அவருடன் நடித்த பல முன்னணி ஹீரோக்கள் மற்றும் நண்பர்கள் மற்றும் இயக்குனர்கள் ஆகியோர் மேடையில் புகழ்ந்து பேசினார்கள். அதைத் தொடர்ந்து மீனாவுடன் 'என் ராசாவின் மனசிலே' என்ற படத்தில் நடித்த ராஜ்கிரணை பேச அழைத்தனர்.
ராஜ்கிரண் பேச்சு
அப்போது பேசிய ராஜ்கிரண் 'என் ராசாவின் மனசிலே என்ற படத்தில் தனது 15 வயதிலேயே கர்ப்பிணி கதாபாத்திரத்தில் மீனா சிறப்பாக நடித்தார். ஒரே நாளில் ஒரு பாடலை 5,6 லொக்கேஷன்களில் ஷூட் பன்னோம். 5,6 உடை மாற்றமும் இருந்தது. அந்த கால கட்டங்களில் இப்போது போன்ற கேரவன் வசதிகள் எல்லாம் கிடையாது.
அப்போது நடு ரோட்டில் ஒரு ஓரமாக காரை நிறுத்திவிட்டு, காரின் பின்னல் உடையை மாற்றி விட்டு மீனா ஷூட்டுக்கு ஓடிவருவார். ஒரே நாளில் அந்த சாங் ஷூட்டிங்கை முடித்தோம். அதையெல்லாம் இன்றைய கால கட்டத்தில் நினைத்து பார்த்தால் சாத்தியமே இல்லை. இவ்வளவுக்கும் காரணம் மீனாவின் அம்மா அவருக்கு ஊக்கம் கொடுத்தது, உற்சாகம் கொடுத்தது, புரிய வைத்தது.
இல்லையென்றால் ஒரு 15 வயது பெண்ணுக்கு நடு ரோட்டில் நின்று உடை மாற்றுவது என்றால் மனசு கேட்காது. ஆனால் அந்த தொழில் பக்தி, தொழில் ஈடுபாடு, விடா முயற்சி இதையெல்லாம் மீறி இறைவன் மீனாவிற்கு கொடுத்திருக்கும் திறமை, மீனாவினுடைய அம்மா இதெல்லாம் சேர்ந்துதான் மீனா என்று ராஜ்கிரண் பேசியுள்ளார்.