நடிகர் ராஜ்கிரணை பாதியிலயே கழட்டி விட்ட பிரபல இயக்குநர்? - வெளியான தகவல் - ஷாக்கான ரசிகர்கள்
பிரபல இயக்குநர் பாலா இயக்கத்தில் வெளியான படம் பிதாமகன். இப்படத்தில் நடிகர் விக்ரம், சூர்யா, லைலா, சங்கீதா ஆகியோர் நடித்திருந்தனர். இப்படம் நடிகர் விக்ரமிற்கு வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்த படம்.
இப்படத்தில் ஒரு ஜெயில் காட்சியில் ஜெய்லராக மீசை ராஜேந்திரன் உண்மையான போலீஸ் போலவே அட்டகாசமாக நடித்திருப்பார். இப்படம் குறித்து ஒரு செய்தி தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அதாவது, இப்படத்தில் நடிகர்களை தேர்வு செய்வதில் நீண்ட நாள்களாக இழுபறியிலேயே இருந்ததாம். இப்படி இருக்கையில் பிதாமகன் ஜெயிலர் கதாபாத்திரத்திற்கு முதன்முதலில் நடித்துக் கொண்டிருந்தவர் நடிகர் ராஜ்கிரண் தான்.
ஆனால், அவர் சூட்டிங்கில் இருந்த போது மீசை ராஜேந்திரன் செட்டிற்கு வந்துள்ளார். அப்போது ராஜ்கிரண் நடித்துக் கொண்டிருப்பதை மீசை ராஜேந்திரன் பார்த்துக் கொண்டிருந்தார்.
சூட்டிங் முடிந்ததும் ராஜ் கிரண் கிளம்பி போய்விட்டார். அப்போது, பாலாவும், விக்ரமும் தனியாக போய் பேசிவிட்டு மீசை ராஜேந்திரனை அழைத்து ஜெயிலர் கதாபாத்திரம் நீதான் பண்ணனும்னு சொன்னாராம்.
இந்த விஷயத்தில் சமீபத்தில் இப்படம் குறித்து பேட்டி மீசை ராஜேந்திரனே கூறியுள்ளார்.