அரசியலுக்கு வருகிறாரா தோனி? காங்கிரஸ் எம்.பி சொன்ன தகவல்
தோனியின் அரசியல் வருகை குறித்து காங்கிரஸ் எம்பி ராஜிவ் சுக்லா பேசியுள்ளார்.
தோனி
இந்தியாவில், சினிமா மற்றும் விளையாட்டு துறையில் பிரபலமாக இருப்பவர்கள் அரசியலுக்கு வருவது புதிதல்ல. இந்த துறைகளில் இருந்து அரசியலுக்கு வந்து வெற்றி பெற்றவர்கள் ஏராளம். ]
இதே போல் அதிக ரசிகர்களை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான தோனி அரசியலுக்கு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ராஜிவ் சுக்லா
இது குறித்து பேசிய பிசிசிஐ துணை தலைவரும், காங்கிரஸ் எம்பியுமான ராஜிவ் சுக்லா, "தோனி ஒரு அரசியல்வாதி ஆக முடியும் என்று நான் உணர்கிறேன். தோனி அரசியலிலும் சிறப்பாக செயல்பட முடியும். அவர் பிரபலமானவர் என்பதால் எளிதில் வெற்றி பெறுவார்.
அவர் அரசியலுக்கு வருவாரா என்பது முழுக்க முழுக்க அவர் கையில் உள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதாகக் கேள்விப்பட்டு ஒருமுறை அவரிடம் கேட்டேன். 'இல்லை' என்று மறுத்தார்" என தெரிவித்தார்.