புதிய தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் நியமனம் - குடியரசுத் தலைவர் உத்தரவு

By Nandhini May 12, 2022 08:46 AM GMT
Report

இந்திய தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமாரை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.

தலைமை தேர்தல் ஆணையராக இருந்த சுஷில் சந்திரா வரும் 14ம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். இதனையடுத்து, வரும் 15ம் தேதியிலிருந்து ராஜீவ் குமார் பொறுப்பேற்பார் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

யார் இந்த ராஜீவ் குமார்?

ராஜீவ் குமார் ஜார்க்கண்ட்டில் பிறந்தவர். இவர் தனது கடந்த 30 ஆண்டுகளாக ஜார்கண்டில் நிர்வாகப் பதவிகள் உட்பட பல முக்கிய பணிகளை ஆற்றியவர். மத்திய அரசிலும் பல்வேறு பதவிகளில் பணியாற்றியாற்றியுள்ளார்.

ராஜீவ் குமார் மார்ச் 19, 2012 முதல் மார்ச் 12, 2015 வரை நிதி அமைச்சகத்தின் செலவினத் துறையின் இணைச் செயலாளராகவும் பின்னர் கூடுதல் செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, மார்ச் 12, 2015 முதல் ஆகஸ்ட் 30, 2017 வரை பணியாளர்கள் பொது குறைகள் மற்றும் ஓய்வூதியம், D/o பணியாளர்கள் மற்றும் பயிற்சி அமைச்சகத்தின் நிறுவன அதிகாரி மற்றும் கூடுதல் / சிறப்பு செயலாளராக பணியாற்றி இருக்கிறார்.