சீமான் மீது திமுக ராஜீவ்காந்தி பரபரப்பு புகார்
அதிக வாரிசுகளை வேட்பாளராக நிறுத்தியுள்ள கட்சி நாம் தமிழர் கட்சி தான் என்று திமுக செய்தி தொடர்பு இணைச்செயலாளரான ராஜீவ்காந்தி குற்றம்சாட்டியுள்ளார். திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை நேற்று முக ஸ்டாலின் வெளியிட்டார். இந்த சட்டப்பேரவை தேர்தலில் அதிகளவில் வாரிசுகளுக்கு இடமளிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது, முதன்முறையாக உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கத்தில் போட்டியிடுகிறார்.
இந்நிலையில் நாம் தமிழர் கட்சியில் தான் அதிக வாரிசுகளை வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளதாக திமுக செய்தி தொடர்பு இணைச்செயலாளரான ராஜீவ்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும் அக்கட்சியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பெண் வேட்பாளர்கள் பெரும்பாலும் கட்சியில் உள்ளவர்களின் அக்கா, தங்கை, மனைவியே எனவும் தெரிவித்துள்ளார்.