ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் திடீர் தீ விபத்து - அலறி ஓடிய கொரோனா நோயாளிகள்
ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தீ விபத்து
இன்று அதிகாலை 3.30 மணி அளவில் சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.இதனால் நோயாளிகள் மிகவும் பதற்றமும், அதிர்ச்சியும் அடைந்தனர்.
தீ மளமளவென பரவியதால் கொரோனா நோயாளிகள் அலறிக்கொண்டு வார்டிலிருந்து வெளியே ஓடிவந்தனர். இதனையடுத்து, உடனடியாக நோயாளிகள் வேறொரு வார்டுக்கு மாற்றப்பட்டனர்.
போலீசார் விசாரணை
இது தொடர்பாக தீயணைப்புத்துறையினருக்கும், போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசாரும், தீயணைப்புத் துறையினரும் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தீ விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
இந்த விபத்தில் நோயாளிகள், பொதுமக்கள் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.