நளினி உள்ளிட்ட 6 பேர் விடுதலை: தீர்ப்பை மறு ஆய்வு செய்ய மத்திய அரசு மனு!

Tamil nadu India Supreme Court of India
By Sumathi Nov 18, 2022 02:18 AM GMT
Report

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் நவம்பர் 11 தீர்ப்பை மறுஆய்வு செய்ய மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது.

ராஜீவ்காந்தி கொலை வழக்கு

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு சிறையில் உள்ள நளினி உள்ளிட்ட 6 பேரை விடுவிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த தீர்ப்பை அடுத்து, நளினி உட்பட பலரும் விடுதலை செய்யப்பட்டனர்.

நளினி உள்ளிட்ட 6 பேர் விடுதலை: தீர்ப்பை மறு ஆய்வு செய்ய மத்திய அரசு மனு! | Rajiv Gandhi Case Review Petition In Supreme Court

இந்நிலையில், நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகியோர் விடுதலை தொடர்பான தீர்ப்பை மறுஆய்வு செய்ய வேண்டும் என மத்திய அரசு தற்போது உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

6 பேர் விடுதலை

அதில்,"நாட்டின் முன்னாள் பிரதமரைக் கொன்ற கொடூரமான குற்றத்திற்காக சட்டத்தின்படி முறையாகத் தண்டிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு பயங்கரவாதிகள் உள்ளிட்டோருக்கு மன்னிப்பு வழங்குவது சர்வதேச அளவில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது. எனவே தேச இறையாண்மை அதிகார வரம்புக்குள் அந்த விவகாரம் வரக்கூடியது,” என குறிப்பிட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக தமது தரப்பு வாதத்தைக் கேட்காமலேயே கைதிகளை விடுதலை செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. முன்னதாக, இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.வி.நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு, ”கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும்

மறு ஆய்வு

நளினி, ரவிச்சந்திரன், சாந்தன், முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய 6 பேரும், உச்ச நீதிமன்றத்துக்குரிய பிரத்யேக அதிகாரத்தைப் பயன்படுத்தி விடுதலை செய்யப்படுகிறார்கள்" என்று தீர்ப்பளித்தது. இதைத்தொடர்ந்து, ஆறு பேரும் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து, விடுதலை செய்யப்பட்ட முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் ஆகியோர் தற்போது இலங்கை சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.