தனுஷ் பட நடிகைக்கு திடீர் திருமணம் - மாப்பிள்ளை யாருனு பாருங்களேன்...
ரஜிஷா விஜயன் பதிவு வைரலாகி வருகிறது.
ரஜிஷா விஜயன்
மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் ரஜிஷா விஜயன். தொடர்ந்து சூர்யாவின் ஜெய்பீம், கார்த்தியின் சர்தார் போன்ற படங்களிலும் நடித்திருந்தார்.
தற்போது தொடர்ந்து மலையாளப் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இவர் பிரபல ஒளிப்பதிவாளரான டோபின் தாமஸ் என்பவரைக் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருவதாக தகவல் பரவியது.
திருமணம்?
இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அவ்வப்போது சமூக வலைதளங்களில் பதிவிட்டும் வந்தனர். இந்நிலையில், டோபின் தாமஸ் தனது சமூக வலைதளத்தில் ரஜிஷாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு,
“1461 நாட்கள். சூரியனைச் சுற்றி மற்றொரு பயணத்தை எண்ணுகிறோம்” எனப் பதிவிட்டிருந்தார்.
இதற்கு முடிவில்லா காதலை நோக்கி என ரஜிஷா கமெண்ட் செய்திருந்தார். இதனை பார்த்த ரசிகர்கள் இருவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.