ரஜினிகாந்தை நேரில் சந்திக்க அப்பல்லோ மருத்துவமனை அனுமதிக்காததுக்கு காரணம் என்ன?

#rajiny #admitted #annaththa
By Jon Dec 25, 2020 10:33 PM GMT
Report

ரஜினிகாந்த் தற்போது உடல் நலத்துடன் இருப்பதாகவும் அவருக்கு ஓய்வு மிகவும் முக்கியம் எனவும் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு 'அண்ணாத்த' படப்பிடிப்பில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.

அப்போது ரஜினிக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியானது. 22-ம் தேதி ரஜினிகாந்துக்கு பரிசோதனை செய்யப்பட்டு அவருக்குத் தொற்று இல்லை என்பது தெரிய வந்தது.

அன்றிலிருந்து அவர் தனிமையில் தான் இருக்கிறார். தொடர்ந்து அவரது உடல்நலனும் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

மேலும் ரஜினிகாந்த் அவர்களுக்கு ரத்த அழுத்தம் ஏறி இறங்கி வருவதாவும். அதற்கான பரிசோதனையில் ஈடுபடுத்த அவர் தொடர்ந்து மருத்துவமனையிலே தீவிரமாக கண்காணிப்படுவார் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் சிகிச்சைக்கு பிறகு தற்போது அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தாவது, "ரஜினிகாந்தின் உடல்நிலை தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. அவரது ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்க சரியான அளவு மருந்துகள் தரப்படுகின்றன.

அவர் இன்றிரவு மருத்துவமனையில் இருப்பார். நாளை மேற்கொண்டு அவரது ஆரோக்கியம் எப்படி இருக்கிறது என்று பார்க்கப்படும். அவர் ஆரோக்கியமாக, ஓய்வில் இருக்கிறார்.

யாரும் அவரைப் பார்க்க அனுமதி இல்லையென்பதால் யாரும் அவரைப் பார்க்க வர வேண்டாம் என குடும்பத்தினரும், சிகிச்சை செய்யும் மருத்துவர்களும் கேட்டுக்கொண்டுள்ளனர். அவரது மகள் அவரோடு இருக்கிறார்". இவ்வாறு மருத்துவமனை நிர்வாகம் தங்கள் தரப்பில் விளக்கம் அளித்துள்ளது.