சிகிச்சைக்கு பின்னர் முதன்முறையாக வீடியோ வெளியிட்ட ரஜினி

rajiny-hospital-india
By Jon Jan 01, 2021 11:12 AM GMT
Report

அப்பல்லோ மருத்துவமனை ஊழியர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து கூறிய ரஜினிகாந்தின் வீடியோ வைரலாகி வருகிறது. அண்ணாத்த படப்பிடிப்புக்காக ஹைதராபாத் சென்றார் ரஜினிகாந்த், பல்வேறு கட்டுப்பாடுகளுடன் படப்பிடிப்பு நடந்து வந்த போதும், நால்வருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

இதனையடுத்து ரஜினிக்கு சோதனை செய்த போது, நெகட்டிவ் என வந்தாலும், ரத்த அழுத்த மாறுபாட்டின் காரணமாக ஹைதராபாத் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், தான் அனுமதிக்கப்பட்ட அப்போலோ நிர்வாகக் குழுவினருக்கு புத்தாண்டு வாழ்த்துகளை வீடியோ மூலம் தெரிவித்துள்ளார்.

அந்த வீடியோவில் 'கடவுள் அருளால் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன். உங்கள் சேவை மிகவும் சிறப்பானதாக இருந்தது' என்று கூறியதுடன் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.