ரஜினிக்கு அதிகரிக்கும் சோர்வு - அமெரிக்கா சென்று சிகிச்சை தொடர குடும்பத்தினர் தீவிரம் !

rajiny-hospital-cinema
By Jon Jan 03, 2021 09:42 AM GMT
Report

நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்தபோது அதில் சில பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து உடனடியாக படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து, ரஜினிகாந்த்க்கு திடீரென உடல்நலகுறைவு ஏற்பட்டது. உடனடியாக அவர் ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் தமிழகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது அவருக்கு ரத்த அழுத்தம் அதிகரித்ததாகவும் அதற்கு உரிய சிகிச்சை எடுத்துக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. பின்னர் சிகிச்சை முடிந்து வீட்டிற்கு வந்த ரஜினிகாந்த் அரசியல் நிலைப்பாடு குறித்து தெளிவாக அறிவித்துவிட்டார். நான் அரசியலுக்கு வரமாட்டேன் என்று.

இதனை பல்வேறு தரப்பினரும் விமர்சனம் செய்து வருகிறார்கள். மேலும் ரஜினியின் ஆதரவாளர்கள் நாள்தோறும் அவரது வீட்டின் முன்பு போராட்டம் நடத்தியும் வருகிறார்கள். அரசியலுக்கு வரவேண்டும் என்று அவரது ரசிகர்கள் வற்புறுத்தி வருகிறார்கள். இதனால் நடிகர் ரஜினிகாந்த் கடந்த சில நாட்களாக மனச்சோர்வுடன் உள்ளார்.

ஏற்கனவே உடல்நலப்பாதிப்பு உள்ள நிலையில் மேலும் மனச்சோர்வை ஏற்படுவதால் சிகிச்சை பெற அவரை அமெரிக்காவுக்கு அழைத்துச்செல்ல குடும்பத்தினர் முடிவெடுத்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

உள்ள மருத்துவமனை ஒன்றில் உடல் பரிசோதனை செய்து கொண்டு, அங்கேயே சில நாட்கள் தங்கி சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் என முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

ஏற்கனவே ரஜினிகாந்த் அமெரிக்காவில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துக்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.