‘’என் நண்பரை இழந்து விட்டேன் ’’- கண்ணீரில் நடிகர் ரஜினிகாந்த்

தமிழ் திரை உலகின் பழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்த் உடல் நலக்குறைவால் காலமானார்.

தங்கப்பதக்கம், பைரவி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த பழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்த் இன்று காலமானார். அவருக்கு வயது 82

. 1965ஆம் ஆண்டு இயக்குனர் ஸ்ரீதரின் வெண்ணிற ஆடை திரைப்படத்தில் அறிமுகமானவர் நடிகர் ஸ்ரீகாந்த்.

நடிகர்கள் சிவாஜி கணேசன், முத்துராமன், ஜெய்சங்கர், ரஜினி, கமல் உள்ளிட்ட பல நடிகர்களுடன் இணைந்து நடித்தவர் நடிகர் ஸ்ரீகாந்த்.

இந்த நிலையில், நடிகர் ஸ்ரீகாந்த் மறைவுக்கு, நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்:

"என்னுடைய அருமை நண்பர் திரு ஸ்ரீகாந்த் அவர்கள் மறைவு எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது. அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும்." என்று தெரிவித்துள்ளார்.
ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்