ஒவ்வொரு வீட்டிலும் தேசியக்கொடி ஏற்றுங்கள் - ரஜினிகாந்த் வேண்டுகோள்

Rajinikanth Viral Video
By Nandhini Aug 13, 2022 10:27 AM GMT
Report

தேசிய கொடி படத்தை வைக்க அழைப்பு விடுத்த பிரதமர்

நாட்டின் 75வது சுதந்திர தினம் வரும் 15ம் தேதி கொண்டாடப்பட உள்ளது.

இன்று முதல் முதல் 15ம் தேதி வரை ஒவ்வொரு வீட்டிலும் தேசிய கொடியை பறக்க விடுங்கள் என்றும், ஆகஸ்ட் 2ம் தேதி முதல் 15ம் தேதி வரை அனைத்து இந்தியர்களும் சமூக ஊடக முகப்பு புகைப்படமாக தேசிய கொடியை பதிவிட வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்.

பிரதமர் மோடியின் அழைப்பு விடுத்திருந்த நிலையில், நடிகர்கள், நடிகைகள், அரசியல் முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்டோர் பலர் தனது சமூக வலைதள பக்கத்தின் முகப்பு படத்தை மாற்றியுள்ளனர்.

நடிகர் ரஜினிகாந்த்

பிரதமர் மோடி தேசிய கொடி படத்தை வைக்க அழைப்பு விடுத்திருந்த நிலையில், நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த 11ம் தேதி தனது சமூக வலைதள பக்கத்தின் முகப்பு படத்தை மாற்றினார். நேற்று நடிகர் ரஜினிகாந்த் தன் வீட்டில் தேசிய கொடியை ஏற்றினார். 

rajinikanth

வீடியோ வைரல்

இந்நிலையில், வரும் 15ம் தேதி 75வது சுதந்திரத்தையொட்டி, ஒவ்வொரு வீட்டிலும் தேசிய கொடியை ஏற்றுங்கள் என்று நடிகர் ரஜினிகாந்த் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

இதோ அந்த வீடியோ -