தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, ரசிகர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் நடிகர் ரஜினிகாந்த் - ரசிகர்கள் கொண்டாட்டம்
சித்திரை 1-ம் தேதி தமிழ் புத்தாண்டாக,சித்திரை திருநாளாக தமிழர்கள் கோலகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. உறவினர்களும், நண்பர்களுக்கும் தமிழ் மக்கள் வாழ்த்து கூறி வருகின்றனர். மேலும், சமூகவலைத்தளங்களில் தமிழ் புத்தாண்டை நெட்டிசன்கள் பதிவிட்டு கொண்டாடி வருகின்றனர்.
தமிழ் புத்தாண்டையொட்டி கோவில்களில் அதிகாலை முதலே சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. இதையடுத்து பொதுமக்கள் அதிகாலை முதலே கோவில்களுக்கு சென்று வழிபாடு நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, ரசிகர்களை சந்தித்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.
சென்னை, போயஸ் இல்லம் முன்பு திரண்டிருந்த ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்தார்.
ரசிகர்கள் வழங்கிய தாமரை மலரை ஏற்றுக் கொண்டு, ரசிகர்களைப் பார்த்து புன்னகைத்து கையசைத்தார்.
இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. சமூகவலைத்தளத்தில் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.