மகள் ஐஸ்வர்யா விவாகரத்து ; ரஜினிகாந்த் புதிய முயற்சி..இந்த முறையாவது வெற்றி கிடைக்குமா?
தமிழ் சினிமாவின் பன்முக கலைஞர் என்றழைக்கப்படும் நடிகர் தனுஷ் சமீபத்தில் தனது காதல் மனைவியான ஐஸ்வர்யா ரஜினிகாந்தை விவாகரத்து செய்வதாக சமூக வலைதளம் வாயிலாக அறிவித்தார்.
இந்த செய்தி தனுஷ் ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இருவரையும் சேர்த்து வைக்கும் முயற்சியில் இரு வீட்டாரும் தொடர்ந்து பேச்சு வார்த்தையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
மகளின் விவாகரத்தால் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தும் மிகுந்த மன வேதனையில் யாரிடமும் பேசாமல் இருந்து வருவதாகவும் செய்திகள் காட்டுட்தீ போல் பரவின.
இதனை தொடர்ந்து லதா ரஜினிகாந்தும் மகள் ஐஸ்வர்யாவை சமாதானம் செய்து முடிவை மாற்றிக்கொள்ளுமாறு பேசி வருகிறார்.
அதேபோல் தனுஷிடம் அவரது அப்பா கஸ்தூரி ராஜா பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த விவகாரத்தில் ரஜினிகாந்த் நேரடியாக இருவரிடம் இது குறித்து பேச இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
முன்னதாக, இதைபோலவெ தனுஷின் சகோதரரும் இயக்குனருமான செல்வராகவன் நடிகை சோனியா அகர்வால் இடையே விவாகரத்து நடந்த சமயத்தில் ரஜினி இருவரிடமும் முடிவை மாற்றிக்கொள்ளுமாறு பேச்சுவார்த்தை நடத்தினார்,
ஆனால் அந்த முயற்சி தோல்வியில் தான் முடிந்தது.
அதைபோலவெ இப்போது தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்திலும் ரஜினி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இந்த முறையாவது ரஜினியின் முயற்சி வெற்றியடையுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டி இருக்கிறது.