நான் இதனாலத்தான் அரசியலுக்கு வரலை : தனி விளக்கம் கொடுத்த ரஜினிகாந்த்
சென்னை ராயப்பேட்டை மியூசிக் அகடாமியில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டு பேசினார்.அப்போது தனது அரசியல் பயணம் குறித்து பேசிய ரஜினி :
மருத்துவர் ஆலோசனை
நான் அரசியல் பணியில் ஈடுபடும்போது கொரோனா இரண்டாவது அலை தொடங்கி விட்டது. நான் அந்தச் சமயத்தில் வெளியே சென்றால் உடல்நிலை பாதிக்கப்படும் என்று மருத்துவர் கூறினார். தேர்தல் பிரச்சாரத்திற்காக நான் சென்றால் முதலில் என் முககவசத்தை கழற்ற வேண்டியிருக்கும்.

அதேபோல் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதும் இயலாத காரியம். இதை எப்படி மக்களிடம் சொல்வது என்ற யோசனையில் இருந்தேன்.
அரசியலுக்கு வரலை
அப்போது என்னுடைய மருத்துவர், யார் என்ன சொன்னாலும் பரவாயில்லை, அவர்களிடம் நான் கூறுகிறேன். ரசிகர்களிடம் நான் விளக்கம் அளிக்கிறேன்'என்று கூறி எனக்கு துணையாக நின்றார். அதன்பிறகு தான் அரசியலில் இருந்து விலகுவதாக நான் அறிவித்தேன் என தெரிவித்தார்.