திமுகவிற்கு பயந்து அரசியலில் இருந்து விலகினேனா? காலம் பதில் சொல்லும் - ரஜினிகாந்த் விளக்கம்

Rajinikanth DMK Thamizhaga Vetri Kazhagam
By Karthikraja Mar 17, 2026 06:52 AM GMT
Report

திமுகவிற்கு பயந்து ரஜினிகாந்த் அரசியலில் இருந்து விலகியதாக ஆதவ் அர்ஜுனா பேசியதற்கு ரஜினிகாந்த் விளக்கமளித்துள்ளார்.

ஆதவ் அர்ஜுனா பேச்சு

தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரசார மேலாண்மை பிரிவு செயலாளர் ஆதவ் அர்ஜுனா சமீபத்திய கட்சி நிகழ்வு ஒன்றில் பேசிய போது, திமுக கொடுத்த பயத்தால், நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவில்லை என்று பேசியிருந்தார். 

திமுகவிற்கு பயந்து அரசியலில் இருந்து விலகினேனா? காலம் பதில் சொல்லும் - ரஜினிகாந்த் விளக்கம் | Rajinikanth React Aadhav Arjuna Political Comment

அவரின் பேச்சுக்கு திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த தலைவர்களும், திரைத்துறையினர் மற்றும் ஊடகவியலாளர்களும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில், ஆதவ் அர்ஜுனாவின் பேச்சு குறித்து நடிகர் ரஜினிகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ரஜினிகாந்த் விளக்கம்

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தவெசு கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் திரு ஆதவ் அர்ஜுனா அவர்கள் சமீபத்தில் என்னைப் பற்றி உண்மைக்கு மாறான ஒரு கருத்தைத் தெரிவித்திருந்தார். 

திமுகவிற்கு பயந்து அரசியலில் இருந்து விலகினேனா? காலம் பதில் சொல்லும் - ரஜினிகாந்த் விளக்கம் | Rajinikanth React Aadhav Arjuna Political Comment

அவருடைய அவதூறுக் கருத்தைக் கண்டித்து, எனக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த தமிழக சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் மதிப்பிற்குரிய எடப்பாடி திரு.பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் திரு.நயினார் நாகேந்திரன், மத்திய அமைச்சர் திரு.எல்.முருகன், தமிழக அமைச்சர் திரு.ரகுபதி. திரு தொல் திருமாவளவன். 

திரு. எஸ்.பி.வேலுமணி, நண்பர் திரு அண்ணாமலை, திருஅர்ஜுனமூர்த்தி, திரு.அன்புமணி ராமதாஸ், திரு.ஜி.கே. வாசன், திரு.ஜான் பாண்டியன்,, திரு.புகழேந்தி மற்றும் பல கட்சி அரசியல் தலைவர்கள், திரு.அமீர், திரு.ஜி.தனஞ்சயன் மற்றும் திரையுலக நண்பர்கள், மற்றும் திருநக்கீரன் கோபால், சாணக்கியா திரு.ரங்கராஜ் பாண்டே மற்றும் ஊடகத்துறையினர்.

என்னை வாழவைக்கும் தெய்வங்களான ரசிகப் பெருமக்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்."காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்" என தெரிவித்துள்ளார்.