“அந்த நாடு உருப்படாது” இலங்கையின் நிலையை அன்றே கணித்த ரஜினிகாந்த்..!

Rajinikanth Sri Lanka
By Thahir May 14, 2022 08:17 PM GMT
Report

கடும் பொருளாதார நெருக்கடியால் சிக்கி தவித்து வருகிறது இலங்கை.இதனால் அந்நாட்டு மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகி வருகிறது.

இதனிடையே கடந்த 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தின் போது இலங்கை உருப்படாது என ரஜினிகாந்த் பேசிய வீடியோவை அவரது ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

“அந்த நாடு உருப்படாது” இலங்கையின் நிலையை அன்றே கணித்த ரஜினிகாந்த்..! | Rajinikanth Predicted Situation Srilanka Video

இலங்கையை ஆளும் அதிபர் கோட்டபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலக கோரி மக்கள் ஒரு மாதத்திற்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த 9 ம் தேதி பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலகிய நிலையில் இலங்கையில் கலவரம் வெடித்தது. இதையடுத்து போராட்டக்காரர்கள் மல்வானை பகுதியில் உள்ள முன்னாள் பசில் ராஜபக்ச வீட்டுக்கு தீ வைத்தனர்.

இந்த கலவரத்தால் தப்பித்தோம் பிழைத்தோம் என திரிக்கோண மலையில் உள்ள கப்பல் படத்தளத்திற்கு தப்பித்துச் சென்றதாக தகவல் வெளியானது.பின்னா் அந்நாட்டின் புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்கே பதவியேற்றார்.

இந்நிலையில் இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுவதை கண்டித்து நடிகர்,நடிகைகள் சென்னை நடிகர் சங்க வளாகத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டு உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டனர்.

இந்த போராட்டத்தில் பங்கேற்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொண்டார்.அவர் அந்த உண்ணாவிரத போராட்டம் முடியும் வரை இருந்தார்.

பின்னர் அவர் பேசிய ஆவேச பேச்சு தற்போது 15 ஆண்டுகளுக்கு பின்னர் பலித்துள்ளதாகவும்,அவர் தீர்க்கதரசி என அவரது ரசிகர்கள் பலரும் வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

அப்படி என்ன பேசினார் என்பதை சற்று விரிவாக பார்க்கலாம், நான் இங்கேயும் சரி, வெளிநாடுகளுக்குச் செல்லும்போதெல்லாம் பல இலங்கைத் தமிழர்களைச் சந்தித்திருக்கிறேன்.

அவர்கள் இலங்கைத் தமிழ்ல திட்டினால்கூட அது சங்கீதம் மாதிரி இனிமையாக இருக்கும். அவர்கள் திட்டினால்கூட அது சங்கீதம் மாதிரி இனிமையாக இருக்கும்.

பாஷை மட்டுமல்ல, பழகுவதற்கும் அவ்வளவு இனிமையானவர்கள். அந்த நல்ல மக்கள் அவங்க நாட்ல வாழ முடியாமல் மற்ற நாடுகளில் எப்படியெல்லாம் அவதிப்பட்டு வாழ்கிறார்கள் என்பதை நினைக்கும்போது மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.

ரெண்டு வருஷமா அஞ்சு வருஷமா, பத்து வருஷமா... முப்பது வருஷமா உங்களால் அவர்களை ஒழிக்க முடியலன்னு சொன்னா நீங்க என்ன வீரர்கள்... ஆம்பிளைங்களா நீங்கள்? தோல்விய ஒத்துக்க முடியலேன்னு சொல்லு.

ஓகே, ஒத்துக்கறதுக்கு உங்க ஈகோ இடம் கொடுக்கலியா... சரி... நீ என்னதான் செஞ்சிருக்கே... முடியல உன்னால... ஒத்துக்கணும்.

இன்னொன்னு புரிஞ்சுக்கணும்... இலங்கை மட்டுமல்ல... எந்த நாடாக இருந்தாலும், ஏழை மக்கள், பாமர மக்கள், அப்பாவி மக்கள், குழந்தைகள், பெண்கள், முதியோர் அவர்களின் வேதனை... அந்த காற்று பட்டாலும் கூட அந்த நாடு உருப்படாது.

எந்த நாடகாட்டும், சாமானிய ஜனங்க பாதிக்கப்படக் கூடாது. எந்த நாடாக இருந்தாலும் சரி... எந்த விதத்திலயும் அப்பாவி மக்கள் பாதிக்கப்படக் கூடாது.

அந்த நாடு உருப்படாது, அவங்க சுவாசக் காற்று பட்டால் கூட அந்த நாடு உருப்படாது. உங்க நாட்ல பாமர மக்கள், பெண்கள், குழந்தைகள் பல ஆண்டுகளாக உதிரம் சிந்தி மடிகிறார்கள் அந்த பூமியில.

அங்க இருக்கிற பாமர மக்கள் சாகிறாங்க... அவர்களது பிணங்கள் புதைக்கப்படறதா நினைக்கிறீங்களா... கிடையாது... விதைக்கப்படறாங்க.

நீங்க யுத்தத்திதில் அந்த மக்களை எல்லாம் அழிச்சா கூட அந்த விதை உங்களை நிம்மதியா வாழ விடாது. நாளை இந்த விதைகள் மீண்டும் முளைச்சி வந்து உங்களை அழிக்கும் என்பதை புரிஞ்சுக்குங்க.

நான், என்னுடையது என்ற அகங்காரத்தை விட்டுவிட்டு, இறங்கி வந்து எல்லாருக்கும் இணக்கமான ஒரு முடிவை எடுத்து, யுத்தத்தை நிறுத்துங்க.

அது உங்களுக்கு நல்லது. முப்பது ஆண்டுகள் ஆன பிறகு வேணாம்னு சொன்னா அது எப்படி... செத்தவங்க வந்து வாழறவங்களை சும்மா விட்டுடுவாங்களா... முடியாது. அது எப்படி விடுவாங்க." என பேசினார். இந்த பேச்சினை தான் அவரது ரசிகர்கள் தற்போது பகிர்ந்து வருகின்றனர்..