“ரொம்ப அற்புதமா இருக்குது” - 83 படத்தை பாராட்டி தள்ளிய நடிகர் ரஜினிகாந்த்
83 படத்தை பார்த்து பாராட்டு விதமாக நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கபில் தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 1983-ம் ஆண்டு நடந்த உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்றது. இதை மையமாக வைத்து 83 என்ற படம் கடந்த டிசம்பர் 24 ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.
#83TheMovie wow ???? what a movie… magnificent!!! Many congratulations to the producers @kabirkhankk @therealkapildev @RanveerOfficial @JiivaOfficial and all the cast and crew …
— Rajinikanth (@rajinikanth) December 28, 2021
இதில் கபில்தேவ் ஆக நடிகர் ரன்வீர் கபூர் நடிக்க , அணியில் இடம்பெற்றிருந்த கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்தாக நடிகர் ஜூவா நடித்துள்ளார். மேலும் தீபிகா படுகோனே கபில்தேவ் மனைவி கேரக்டரில் நடித்திருக்கிறார். ஏக்தா டைகர், டியூப் லைட், பஜ்ரங்கி பாய்ஜான் உள்ளிட்ட வெற்றிப் படங்களை கொடுத்த கபீர் கான் இந்த படத்தை இயக்கியுள்ளார்.
இதனிடையே அண்ணாத்த படத்திற்கு பின்னர் அடுத்தப் படம் குறித்த அறிவிப்பை இதுவரை வெளியிடாத நடிகர் ரஜினிகாந்த் மற்ற படங்களை பார்ப்பதும், பாராட்டுவதுமாக இருந்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் வெளியான மாநாடு, ராக்கி படத்தையும் பார்த்து விட்டு பாராட்டினார்.
இந்த நிலையில் 83 படத்தை பார்த்த ரஜினி ட்விட்டரில் வாவ்... என்ன மாதிரியான படம்! அற்புதம், பிரமாண்டம். படத்தின் தயாரிப்பாளர்களுக்கும், இயக்குனர் கபீர்கான், கபில்தேவ், ரன்வீர் கபூர், தீபிகா படுகோனே, ஜீவா மற்றும் படக்குழுவினருக்கும் எனது பாராட்டுக்கள் என பதிவிட்டுள்ளார்.