கலக்கிட்டீங்க - விக்ரம் படத்தை பார்த்துவிட்டு ரஜினி செய்த முதல் காரியம் ‘அவருக்கு’ போன் செய்தது!

Kamal Haasan Rajinikanth Vikram Movie
By Swetha Subash Jun 05, 2022 05:55 AM GMT
Swetha Subash

Swetha Subash

in சினிமா
Report

கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம் படத்திற்காக மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்த ரசிகர்கள் தற்போது படம் பார்த்துவிட்டு இணையத்தில் விமர்சனங்களையும், பாராட்டுகளையும் அள்ளிக் குவித்து வருகின்றனர்.

விக்ரம் படம்

மாநகரம், கைதி, மாஸ்டர் படங்களை தொடர்ந்து தற்போது விக்ரம் படத்தை இயக்கி முடித்துள்ளார் கமலின் தீவிர ரசிகரான லோகேஷ் கனகராஜ். படத்தில் கமலுடன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நாடிகர்கள் விஜய் சேதுபதி, ஃபஹத் ஃபாசில் நடித்துள்ளன்ர். மேலும் கடைசி நேர ட்விஸ்ட்டாக இப்படத்தில் சூர்யா கெஸ்ட் ரோலில் நடித்தார்.

கலக்கிட்டீங்க - விக்ரம் படத்தை பார்த்துவிட்டு ரஜினி செய்த முதல் காரியம் ‘அவருக்கு’ போன் செய்தது! | Rajinikanth Praise Vikram Movie Crew On Phone Call

இந்த படம் ஜூன் 3-ம் தேதியான நேற்று முந்தினம் உலக அளவில் வெளியான நிலையில், நான்கு வருடங்களுக்கு பிறகு வெளியாகும் கமல் படம் என்பதால் ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருந்தனர். அந்த வகையில், விக்ரம் படத்தை பார்த்த ரசிகர்களின் விமர்சனங்கள் இணையத்தில் கலைகட்டி வருகிறது.

படத்தை பார்த்துவிட்டு ரசிகர்கள் மற்றும் அல்லாமல் திரையுலக பிரபலங்களும் படக்குழுவை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

ரஜினி பாராட்டு

அந்தவகையில் விக்ரம் திரைப்படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் கமல் ஹாசனை தொலைப்பேசியில் தொடர்புக்கொண்டு பாராட்டியுள்ளார்.

கலக்கிட்டீங்க - விக்ரம் படத்தை பார்த்துவிட்டு ரஜினி செய்த முதல் காரியம் ‘அவருக்கு’ போன் செய்தது! | Rajinikanth Praise Vikram Movie Crew On Phone Call

அதன்படி ரஜினிகாந்த், கலக்கிட்டீங்க கமல், படம் ரொம்ப சூப்பராக இருக்கு என கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், விக்ரம் படத்தின் தயாரிப்பாளர் மகேந்திரன், இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இசையமைப்பாளர் அனிருத் ஆகியோரையும் தொலைப்பேசியில் தொடர்புக்கொண்ட ரஜினி அவர்களுக்கும் தனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.