நடிகர் ரஜினிகாந்துடன் தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் திடீர் சந்திப்பு
கடந்த 2020ம் ஆண்டு நடிகர் சங்கத் தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் பாண்டவர் அணியில் நாசர், விஷால், கார்த்தி, கருணாஸ், பூச்சிமுருகன் ஆகியோர் போட்டியிட்டார்கள்.
சுவாமி சங்கரதாஸ் அணி சார்பில் பாக்யராஜ், ஐசரி கணேஷ், பிரசாந்த், குட்டி பத்மினி, உதயா ஆகியோர் போட்டியிட்டார்கள்.
ஆனால், இத்தேர்தல் நீதிமன்ற தடை காரணமாக 2 ஆண்டுகளாக வாக்கு எண்ணிக்கை எதுவும் நடக்கவில்லை. இதனையடுத்து, நீதிமன்றம் அனுமதி அளித்ததையடுத்து, வாக்கு எண்ணிக்கை நடந்தது.
இத்தேர்தலில், பாக்யராஜ் 1054 வாக்குகள் பெற்றார். நாசர் 1701 வாக்குகள் பெற்று மீண்டும் தலைவரானார். பொதுச்செயலாளராக மீண்டும் நடிகர் விஷால் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். பொருளாளராக நடிகர் கார்த்தி தேர்வாகி இருக்கிறார்.
[]
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த்தை தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளான நடிகர்கள் நாசர், கார்த்தி, பூச்சிமுருகன் உள்ளிட்டோர் சந்தித்துள்ளனர்.
தென்னிந்திய நடிகர் சங்க பெயரை தமிழ்நாடு நடிகர் சங்கமாக மாற்ற ரஜினி கோரிக்கை வைத்திருந்த நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.

Siragadikka Aasai: சீதாவின் காதலரை நேருக்கு நேர் சந்தித்த முத்து... அடுத்து நடக்கப்போவது என்ன? Manithan

தர்பூசணி சாப்பிடும் இ்ந்த பெண்ணின் படத்தில் இருக்கும் 4 வித்தியாசங்களை கண்டுபிடிக்க முடியுமா? Manithan
