பட வாய்ப்புக்காக என்னை படுக்கைக்கு அழைத்தார்கள்... - ரஜினியின் நெருங்கிய நண்பரின் மகள் பரபரப்பு தகவல்
ரஜினியின் நெருங்கிய நண்பர்தான் மோகன் பாபு. இவருடைய மகள் லஷ்மி மஞ்சு. இவர் தற்போது ஒரு பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.
பட வாய்ப்புக்காக எல்லா நடிகைகளையும் படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் தமிழ், தெலுங்கு திரையுலகில் இருக்கிறது என்று சில பிரபல நடிகைகளே தெரிவித்திருக்கிறார் என்றும், என்னையும் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்திருக்கிறார்கள் என்று வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து லக்ஷ்மி மஞ்சு தெரிவிக்கையில்,
ஐடி துறை, வங்கி துறை என்று பல துறைகளில் பெண் வேலை பார்க்கிறார்கள். ஆனால், சில விஷயங்கள் அவர்களால் தவிர்க்கவே முடியாது. பட வாய்ப்புக்காக பல பெண்களை படுக்கைக்கு அழைக்கப்படுகிறார்கள்.
நான் மோகன் பாபுவின் மகள். எனக்கு இதெல்லாம் நடக்காது என்று நினைத்திருந்தேன். ஆனால், என்னையே படுக்கைக்கு அழைத்துள்ளனர். பாலிவுட்டிலும் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பது சாதாரணமான விஷயமாகவே மாறிவிட்டது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.