முதலமைச்சரை முட்டுச்சந்தில் நிறுத்தபோகின்றார்கள் : அண்ணாமலை கிண்டல்
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, சென்னை நீலாங்கரை கடற்கரையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அங்கு மீனவர் அணி சார்பில் நடைபெற்ற மூவர்ண படகு பேரணி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
குரல் கொடுப்பவர் ரஜினி
இந்நிகழ்ச்சியில் 100 க்கும் மேற்பட்ட மீனவர்கள் 25 படகுகளில் தேசிய கொடியை ஏந்தி பேரணியாக வளம் வந்தனர். இதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அண்ணாமலை இந்தியாவில் 75 ஆவது சுதந்திர தின விழாவை மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக கொண்டாடி வருகின்றனர்.

மேலும் வரும் 15 ஆம் தேதி நடைபெற உள்ள சுதந்திர தின விழாவின்பொது காஷ்மீரில் நெய்யப்பட்ட கொடியைத்தான் பாஜக அலுவலகத்தில் ஏற்ற உள்ளதாக கூறினார். தமிழ்நாட்டில் உள்ள பல பிரச்சனைகளில் குரல் கொடுத்து வருபவர் தான் நடிகர் ரஜினிகாந்த், குறிப்பாக காவிரி பிரச்னையை பற்றி பேசி உள்ளார்
ரஜினி கூறியதில் என்ன தவறு
என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் ஆளுநரிடம் அரசியல் பேசினேன் என்று ரஜினி கூறியதில் என்ன தவறு? என்று கேட்டார் அண்ணாமலை.மேலும் நமது ஜனநாயக நாட்டில் இரண்டு குடிமகன்கள் அரசியல் பேசுவதற்கு உரிமையில்லையா? என்ற கேள்வியையும் எழுப்பினார்.
தி.மு.க ஆட்சியில் அமர்ந்தவுடன் ஆற்றில் மணல் அள்ளுங்கள் என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியிருந்த நிலையில் அமைச்சர் மா.சுப்பிரமணியனும் அவருடன் இணைந்துள்ளார் என குறிப்பிட்டார் .
இவ்வாறு அமைச்சர்கள் உளறுவதின் மூலம் முதல்வரை முட்டுச்சந்தில் நிறுத்திவிடுவார்கள் என்றார் அண்ணாமலை