அரசியல் அலுவலகமா ஆளுநர் மாளிகை ? ரஜினி சந்திப்பால் உருவான சர்ச்சை

Rajinikanth R. N. Ravi
By Irumporai Aug 09, 2022 06:09 AM GMT
Report

அரசியல் சட்ட விதிக்கு விரோதமான முறையில், ஆளுநர் அலுவலகம் ஒரு அரசியல் கூடமாக மாற்றப்பட்டுள்ளதாக மார்க்சிஸ்ட் செயலாளர் பாலகிருஷ்ணன் விமர்சித்துள்ளார்

 ரஜினி ஆளுநர் சந்திப்பு

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து பேசினார், இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. சுமார் அரை மணி நேரம் நீடித்த இந்த சந்திப்பு முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த்.

அரசியல் அலுவலகமா ஆளுநர் மாளிகை  ?  ரஜினி சந்திப்பால் உருவான சர்ச்சை | Rajinikanth Meet Governor Controversy

ஆளுநருடான சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்றும் ஆளுநருக்கு தமிழகம் மிகவும் பிடித்துள்ளதாகவும் , தமிழ் மக்களின் உழைப்பு , நேர்மை அவரை மிகவும் ஈர்த்துள்ளதாக கூறினார். மேலும் ஆளுநரிடம் அரசியல் குறித்தும் விவாதித்தாகவும் அதை பற்றி இப்போது கூறமுடியாது என்றும் கூறினார். 

அரசியல் அலுவலகமா ஆளுநர் மாளிகை

இந்த நிலையில் ஆளுநரை ரஜினி சந்தித்த நிகழ்வு தமிழக அரசியலில் புயலை கிளப்பியுள்ளது, இது தொடர்பாக மார்க்சிஸ்ட் செயலாளர் பாலகிருஷ்ணன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

அரசியல் அலுவலகமா ஆளுநர் மாளிகை  ?  ரஜினி சந்திப்பால் உருவான சர்ச்சை | Rajinikanth Meet Governor Controversy

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் : அரசியல் அலுவலகமா ஆளுநர் மாளிகை? இனியும் பொறுப்போமா? என்ற கேள்வியை கேட்டுள்ளார். மேலும், தமிழ்நாடு ஆளுநரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சந்தித்து பேசி உள்ளார்.

மரியாதை நிமித்தமாக ஆளுநரை சந்திப்பது ஏற்புடையதே. ஆனால், அதன் பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்து 'தாங்கள் அரசியல் பேசியதாகவும் அந்த அரசியலை ஊடகங்களுக்கு பகிர்ந்து கொள்ள முடியாது' எனவும் திரு ரஜினிகாந்த் தெரிவித்து இருப்பது வித்தியாசமாக உள்ளது.

ஆளுநர் மாளிகை அரசியல் பேச்சுக்கான கட்சி அலுவலகம் அல்ல. ஆளுநர் ஒரு கட்சியின் பிரதிநிதியாக செயல்படவும் கூடாது. அப்படி இருக்கையில், ஊடகங்களோடு பகிர்ந்து கொள்ள முடியாத அளவுக்கான அரசியலை பேச வேண்டிய அவசியம் ஆளுநருக்கு எதனால் வந்தது.

இதன் மூலம் அரசியல் சட்ட விதிக்கு விரோதமான முறையில்,ஆளுநர் அலுவலகம் ஒரு அரசியல் கூடமாக மாற்றப்பட்டுள்ளது உறுதியாகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் நாடு அரசுக்கு மாற்றாக, ஒரு போட்டி அரசு நடத்தும் அலுவலகமாக ஆளுநர் மாளிகை மாற்றி, கண்டனத்திற்கு ஆளானது.

இப்போது அதன் அடுத்த கட்டமாக, அரசியல் அலுவலகமாகவும் அது மாற்றப்படுகிறது. இது தமிழ் நாட்டு மக்கள் நலனுக்கு விரோதமானது. தொடர்ந்து அதிகார வரம்பு மீறியே செயல்படும் ஆளுநரின் இந்த போக்கினை இன்னும் எத்தனை காலம் பொறுத்துக்கொள்ளப் போகிறோம்? என பதிவிட்டுள்ளார்.