ரஜினிகாந்தை சந்தித்தாரா அஜீத் : நடந்தது என்ன?
கோலிவுட்டின் மிகப்பெரிய நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜீத். எச்.வினோத் இயக்கத்தில் தற்போது பெயரிடப்படாத படமொன்றில் நடித்து வருகிறார்.
இந்த படத்திற்காக புது கெட்டப்பில் உள்ள அஜீத்தின் புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில், இந்தியாவின் பிரபல நடிகரும், சூப்பர்ஸ்டாருமாகிய நடிகர் ரஜினிகாந்தை, நடிகர் அஜீத் நேரில் சென்று சந்தித்தது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் திடீரென வைரலாகியது.
இதனால், நடிகர் ரஜினியை அஜீத் திடீரென நேரில் சந்தித்தார் என்றும் இந்த சந்திப்பு எதற்காக நடைபெற்றது என்றும் சமூக வலைதளங்களில் விவாதமே நடைபெற்றது. ஆனால், உண்மையில் ரஜினிகாந்த்- அஜீத் சந்திப்பு ஏதும் நடைபெறவில்லை. இந்த புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்று அஜீத்தின் பி.ஆர்.ஓ. சுரேஷ் சந்திரா விளக்கம் அளித்தார்.
இந்த புகைப்படம் அகமல்ஹாசனை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்தபோது எடுத்த புகைப்படத்தில், கமல்ஹாசன் தோளின் மீது நடிகர் ரஜினிகாந்த் கையை போட்டிருப்பார்.
நடிகர் அஜீத்தை சந்தித்த ரசிகர் ஒருவர் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார். ரஜினி-கமல் புகைப்படத்தில் கமல் இருந்த இடத்தில் நடிகர் அஜீத்தை பொருத்தி மிகவும் தத்ரூபமாக ரஜினிகாந்த், அஜீத்தின் தோள் மீது கையை போட்டிருப்பது போன்று எடிட் செய்து இணையத்தில் சில ரசிகர்கள் உலாவவிட்டுள்ளனர்
ஆக இணையத்தில் வைரலான நடிகர் ரஜினிகாந்தை, நடிகர் அஜீத் நேரில் சென்று சந்தித்தது போன்ற புகைப்படம் போலியானது என்பது தற்போது நிருபணமாகியுள்ளது.