‘என் தலைவன் ரஜினி மனசு மாதிரி யாருக்கும் வரவே வராதுப்பா...’ - ரசிகர்கள் நெகிழ்ச்சி
நடிகர் ரஜினி ஆரம்ப கட்டத்தில் சினிமாத்துறையில் காலெடி எடுத்து வைத்து நடிக்க துவங்கியபோது, அவர் வில்லனாகத்தான் நடித்தார்.
‘16 வயதினிலே’ படத்தில் கமலுடன் இணைந்து ரஜினி நடித்தார். அப்படத்தில் ரஜினி வில்லனாக நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்தார்.
இவரின் நடிப்பைப் பார்த்த கமல், அடிக்கடி ரஜினி நீங்கள்... ஏன் ஹீரோவாக நடிக்கக் கூடாது. இது என்னுடைய ஆசை... நீங்க ஹீரோவாத்தான் நடிக்க வேண்டும் என்று அவ்வப்போது கூறுவாராம்.
நெருங்கிய நண்பர்களும் ரஜினி மனதில் விதை போட ஹீரோவா நடிக்க ஆரம்பித்தார் ரஜினி. ஒருபுறத்தில் கமல் நடித்து வந்த படங்கள் சூப்பர் ஹிட். மற்றொரு புறம் ரஜினி நடித்து வந்த படங்கள் மெகா ஹிட்.
இவர்கள் இருவருக்கும் ரசிகர்கள் பட்டாளமே உருவாகத் தொடங்கியது. இதனால், ரஜினி ரசிகர்களுக்கும், கமல் ரசிகர்களுக்குமே போட்டி இருந்து வந்ததே தவிர, ஒருபோதும், கமலுக்கும், ரஜினிக்கும் இடையே நல்ல நட்புறவு இன்று வரை நிலவி வருகிறது.
இருவரும் 60 வயதை கடந்தாலும், இன்றைக்கு வரைக்கும் நல்ல நண்பர்களாகவே இருந்து வருகின்றனர். எந்திரன் படத்தில் ரஜினி இரட்டை வேடத்தில் நடித்திருந்தார்.
அப்போது, ஒரு பேட்டி ஒன்றில் ரஜினி பேசுகையில், நான் என்னப்பா.. எந்திரன் படத்தில் வெறும் இரண்டே கெட் அப் தான். ஆனால், என் நண்பன் கமலஹாசன் தசாவதாரம் படத்தில் 10 வேடத்தில் நடித்தி அசத்தியுள்ளாரே... என்று புகழ்ந்து தள்ளினாராம்.
என் நடிப்பை விட என் நண்பர் கமல்ஹாசனின் நடிப்புதான் சிறந்தது என்பதுபோல் ரஜினி பேட்டிகளில் குறிப்பிட்டு வருவது அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது.
சூப்பர்ஸ்டார் அந்தஸ்த்தில் இருந்தும் கூட, ஒரு நடிகர் அவரின் அந்தஸ்த்தில் இருக்கும் மற்றொரு நடிகரை புகழ்வது அரிதான விஷயமே என்றும், என் தலைவன் மனசு மாதிரி வரவே வராதுப்பா.. என்று ரசிகர்கள் பாராட்டி கருத்து தெரிவித்து வருகின்றனர்.