நடிகர் ரஜினியின் அடுத்த பட இயக்குநர் இவரா? - இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்
நடிகர் ரஜினிகாந்த் அடுத்த இணையவுள்ள இயக்குநர் குறித்த தகவல் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என கொண்டாடப்படும் ரஜினிகாந்தின் நடிப்பில் சிவா இயக்கத்தில் தீபாவளியை முன்னிட்டு வெளியான திரைப்படம் அண்ணாத்த. இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூலில் மாபெரும் சாதனையைப் படைத்தது.
இதனிடையே அண்ணாத்த படம் ஓடிடி இணையதளமான நெட்பிளிக்ஸ், சன் நெக்ஸ்ட் ஆகியவற்றில் நேற்று வெளியானது. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் புதிய படத்தில் நடிக்க தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் ரஜினிகாந்தின் புதிய படத்தை இயக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் இயக்குநர் தேசிங்கு பெரியசாமி, இயக்குநர் சிவா, பேட்ட படத்தை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் என பல இயக்குநர் பெயர்கள் பட்டியலில் இருந்ததாக கூறப்பட்டது.
ஆனால் நடிகர் ரஜினிகாந்தின் அடுத்த படத்தை இயக்குநர் பாண்டிராஜ் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. ஏற்கனவே பாண்டிராஜ் சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் நம்ம வீட்டுப் பிள்ளை, எதற்கும் துணிந்தவர் ஆகிய படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.