இணையதளத்தை கலக்கும் ‘ஜெயிலர் விநாயகர்" - லைக்குகள் அள்ளி தெறிக்கும் ரசிகர்கள்...!

Rajinikanth Jailer Vinayagar Chaturthi
By Nandhini Aug 30, 2022 01:25 PM GMT
Report

‘ஜெயிலர்’

நடிகர் ரஜினிகாந்த் தற்போது நடித்து வரும் திரைப்படம் ‘ஜெயிலர்’. இப்படத்தின் முதல் போஸ்டரை படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் கடந்த 22ம் தேதி ‘Jailer’ என்ற கேப்ஷனுடன் சமூகவலைத்தளங்களில் வெளியிட்டது.

அந்தப் போஸ்டரில் நடிகர் ரஜினிகாந்த் பின்னால் கைகட்டியவாறு நின்று கொண்டிருப்பது போன்ற சில்ஹவுட் புகைப்படம் இருந்தது. இந்த போஸ்டரை நடிகர் ரஜினியின் ரசிகர்கள் வாட்ஸ் அப், பேஸ் புக், இன்ஸ்டாகிராம், டுவிட்டர் என சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

rajinikanth-jailer-vinayagar-chaturthi

‘ஜெய்லர்’ விநாயகர்

இந்நிலையில், திருப்பூரில் ரஜினி ரசிகர் ஒருவர் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ‘ஜெயிலர்’ ஃப்ர்ஸ்ட் லுக் காட்சியில் ரஜினி நிற்பது போல் விநாயகர் சிலையை செய்து அசத்தியுள்ளார். தற்போது இந்த புகைப்படம் ‘ஜெய்லர்’ விநாயகர் என்று சமூகவலைத்தளங்களில் நடிகர் ரஜினி ரசிகர்கள் வைரலாகி வருகிறது.