அன்றும், இன்றும், என்றுமே ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - திண்டுக்கல்லில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு

Rajinikanth Tamil nadu Dindigul
By Thahir Jan 20, 2023 02:31 AM GMT
Report

திண்டுக்கல்லில் ரஜினிகாந்தின் ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

போஸ்டரால் பரபரப்பு 

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருந்து வருபவர் ரஜினிகாந்த். இந்த நிலையில் சினிமா உலகின் அடுத்த சூப்பர் ஸ்டார் யார்? என்ற விவாதம் கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது.

இந்த நிலையில், அன்றும், இன்றும், என்றுமே ரஜினிகாந்த் மட்டுமே சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்கள் ஒட்டி இருக்கும் போஸ்டரால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

rajinikanth-is-the-only-superstar-poster

இதுகுறித்து திண்டுக்கல் நகரின் முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளில் “ உயர உயர பறந்தாலும், ஊர் குருவி பருந்தாகாது, அன்றும் இன்றும் என்றுமே ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் தான் தலைவர் ரஜினிகாந்த் மட்டும் தான், அண்ணாத்த குரூப்ஸ் திண்டுக்கல் மாவட்டம் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.