அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம்: நடிகர் ரஜினிக்கு நேரில் அழைப்பு - அவர் சொன்ன பதில்..?

Rajinikanth Tamil Cinema Tamil nadu India Tamil Actors
By Jiyath Jan 03, 2024 06:54 AM GMT
Report

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்குமாறு நடிகர் ரஜினிகாந்துக்கு நேரில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ராமர் கோயில்

உத்திர பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோயிலின் கும்பாபிஷேகம் வரும் ஜனவரி 22ம் தேதி நடைபெறுகிறது.

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம்: நடிகர் ரஜினிக்கு நேரில் அழைப்பு - அவர் சொன்ன பதில்..? | Rajinikanth Invited For Ayodhya Ram Temple Funtion

கும்பாபிஷேக விழாவில் பங்கேற்குமாறு நாட்டின் முக்கிய பிரமுகர்கள், அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் தமிழகத்தில் அழைப்பிதழ் வழங்கும் பணியை ஆர்எஸ்எஸ் தொடங்கியுள்ளது.

ராமர் கோயில் கும்பாபிஷேகத்தின்போது 140 கோடி இந்தியர்களும் வீட்டில் தீபம் ஏற்ற வேண்டும் - பிரதமர் மோடி!

ராமர் கோயில் கும்பாபிஷேகத்தின்போது 140 கோடி இந்தியர்களும் வீட்டில் தீபம் ஏற்ற வேண்டும் - பிரதமர் மோடி!

ரஜினிக்கு அழைப்பு   

இந்நிலையில் அயோத்தி - ஶ்ரீராம ஜென்மபூமி தீர்த்த க்‌ஷேத்ரா சார்பில் நடிகர் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம்: நடிகர் ரஜினிக்கு நேரில் அழைப்பு - அவர் சொன்ன பதில்..? | Rajinikanth Invited For Ayodhya Ram Temple Funtion

இந்தச் சந்திப்பில் ஆர்எஸ்எஸ் தென்னிந்திய அமைப்பாளர் செந்தில்குமார், பாஜகவின் அர்ஜுன மூர்த்தி உள்ளிட்டோர் வருகை தந்து அழைப்பிதழ் வழங்கினர்.

அதனை பெற்றுக்கொண்ட நடிகர் ரஜினிகாந்த், உறுதியாக குடும்பத்துடன் வருவதாகவும், இந்த விழாவில் பங்கேற்பதை பாக்கியமாக கருதுவதாகவும் தெரிவித்துள்ளாதாக கூறப்படுகிறது.