ரஜினி பெண் பார்க்க சென்ற பிரபல நடிகை; அவ்வளவு இஷ்டம் அவருக்கு.. பிரபல இயக்குனர் பளீச்!
ரஜினி குறித்து இயக்குனர் கே.பாலச்சந்தர் அளித்த பழைய பேட்டி ஒன்று வைரலாகி வருகிறது.
ரஜினி-ஸ்ரீதேவி
தமிழ் சினிமாவின் முக்கிய நடிகராக இருந்து வருபவர் ரஜினிகாந்த். சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். ஹிந்தி, தெலுங்கு, கன்னடா, பெங்காளி, மலையாளம் ஆகிய மொழி படங்களிலும் நடித்துள்ளார்.
ரஜினிகாந்த் மற்றும் ஸ்ரீதேவி இணைந்து முதன்முதலாக மூன்று முடிச்சு என்ற படத்தில் நடித்திருந்தனர். இந்த ஜோடி ஹிட் அடிக்கவே, தொடர்ந்து 22 படங்களுக்கு மேல் ஜோடியாக நடித்துள்ளனர்.
இயக்குனர் தகவல்
இந்நிலையில், முன்னதாக இயக்குனர் கே.பலாசந்தர் அளித்த பேட்டி ஒன்றில், ரஜினிக்கு ஸ்ரீதேவி என்றால் மிகவும் இஷ்டம். அந்த வகையில் கிரகப்பிரவேசத்திற்கு அழைத்திருந்தபோது ஸ்ரீதேவியை பெண் கேட்டு திருமணம் செய்து கொள்ளலாம் என்ற முடிவில் இருந்தார்.
ஆனால் கிரகப்பிரவேசத்தின் போது மின்வெட்டு ஆனதால் நேரம் சரியாக இல்லை என பெண் கேட்பதை ரஜினி தவிர்த்து விட்டார் எனத் தெரிவித்துள்ளார்.
சமீபகாலமாக கமல்ஹாசன் மற்றும் ஸ்ரீவித்யாவின் காதல் கதை இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், தற்போது ரஜினி குறித்த இந்த பேட்டியும் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.