தமிழக ஆளுநருடன் நடிகர் ரஜினிகாந்த் திடீர் சந்திப்பு - காரணம் என்ன?

Rajinikanth Tamil nadu R. N. Ravi
By Thahir Aug 08, 2022 06:33 AM GMT
Report

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆளுநருடன் ரஜினிகாந்த் திடீர் சந்திப்பு 

சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் நடிகர் ரஜினிகாந்த் ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து பேசியுள்ளார்.

Rajinikanth

நடிகர் ரஜினிகாந்த் இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்றிருந்தார்.பின்னர் சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்த் ஆளுநர் ஆர்.என் ரவியை சந்தித்துள்ளார்.

டெல்லி பயணத்திற்கு முன்பாக ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்தார். பின்னர் டெல்லி சென்று சென்னை திரும்பிய நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேசியிருக்கிறார்.

ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்தது குறித்த முழுமையான தகவல் வெளியாகவில்லை. ரஜினிகாந்த் ஆளுநர் ஆர்.என்.ரவியை மரியாதை நிமித்தமாக சந்தித்ததாக அவரது செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை நடிகர் ரஜினிகாந்த் திடீரென சந்தித்து பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.