தங்கம் அல்ல... அவர் எப்பவுமே சிங்கிளாக வரும் சிங்கம் - நடிகர் ரஜினிகாந்துக்கு ஹர்பஜன் சிங் வாழ்த்து...!

Rajinikanth Harbhajan Singh
By Nandhini Dec 12, 2022 11:34 AM GMT
Report

நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாளைக்கு முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தன் டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த் பிறந்தநாள்

நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது 73வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். ரஜினியின் பிறந்தநாளையொட்டி, அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள், ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மேலும், ரஜினிக்கு வாழ்த்து தெரிவிக்க ரசிகர்கள், போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டின் முன்பு அதிகாலை முதலே குவியத் தொடங்கினர்.

ரஜினிகாந்தின் பிறந்தநாளையொட்டிஅவரது ரசிகர்கள் பல்வேறு ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். சமூகவலைத்தளங்களில் #ரஜினிகாந்த், #HBDSuperstarRajinikanth, #Jailer ஆகிய ஹேஷ்டேகுகள் ட்விட்டரில் தேசிய அளவில் டிரெண்டாகி வருகிறது.

rajinikanth-harbhajan-singh-birthday-wishes

வாழ்த்து கூறிய ஹர்பஜன் சிங்

இந்நிலையில், தன் டுவிட்டர் பக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாளைக்கு முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்த அந்த பதிவில்,

செப்பு மிங்கிளாகிவரும் தங்கம் அல்ல

அவர் எப்பவுமே சிங்கிளாகவரும் சிங்கம்..

இந்த அற்புத கலைஞனின் பெயரை காற்றில் அல்ல

காலத்தில் எழுதி வைத்துள்ளது கலை...!

இவ்வாறு தன் டுவிட்டர் பக்கத்தில் ஹர்பஜன் சிங் நடிகர் ரஜினிகாந்த்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.