19 வயது நடிகையுடன் ஏற்பட்ட நெருக்கம்..மனைவியை விட்டு வந்த ரஜினி? போட்டுடைத்த பிரபலம்!
ரஜினிகாந்த் பிரபல நடிகையை விரட்டி விரட்டி காதலித்ததாக பழம்பெரும் நடிகை கூறியுள்ளார்.
ரஜினி
இந்திய சினிமாவிலேயே உட்ச நட்சத்திரம் ரஜினிகாந்த் தான். 70 வயதை கடத்தும் இன்னும் திரைபடங்களில் மும்முரமாக நடித்து வருகிறார் ரஜினிகாந்த். தற்போது ரஜினி நடிப்பில் வேட்டையன் படம் வெளியாகியது.
அதனையடுத்து இப்போது அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்ற படத்தில் நடித்துவருகிறார். ரஜினிகாந்த் பற்றி என்ன செய்தி வெளியானாலும், அது மிகவும் பிரபலமாகி விடுகிறது. அந்த வகையில் பழம்பெரும் நடிகை மற்றும் நடிகர் செந்தாமரையின் மனைவி கௌசல்யா ரஜினிகாந்த் குறித்து
சமீபத்து பேட்டியில் பேசியுள்ளார். அதாவது, நடிகர் ரஜினிகாந்த் திரை உலகில் உச்சத்தை அடைந்த பின்னர், பிரபல இளம் நடிகையுடன் இணைந்து நான்கு படங்கள் நடித்தார். அந்த 19 வயது நடிகைக்கும், ரஜினிகாந்துக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டதாம்.
ஒரு கட்டத்தில் ரஜினிகாந்த் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு இந்த 19 வயது நடிகை கரம் பிடிக்க தயாராகும் அளவுக்கு சென்றதாக கூறப்பட்டது. அந்த நடிகை தான் பிரபல நடிகை அமலா. அமலா மற்றும் ரஜினிகாந்த் இணைந்து 1986 முதல் 1989 வரை, சுமார் நான்கு படங்களில் நடித்துள்ளனர்.
பிரபலம்
இருவருக்கும் இடையே இருந்த கெமிஸ்ட்ரியும் ரசிகர்கள் மத்தியில் அதிகம் ரசிக்கப்பட்டது. கோடை மழை படத்திற்கு பின்னர் மீண்டும் இவர்கள் ஜோடி சேர்ந்த 'வேலைக்காரன்' படத்தில் நடித்த போது தான் இருவருக்கும் இடையே நெருக்கம் அதிகரித்ததாம். அந்த படத்தில் நடிக்கும் போது அமலாவுக்கு 19 வயது.
ரஜினிகாந்த் 36 வயது ஏற்கனவே திருமணம் ஆகி இவருக்கு குழந்தைகளும் இருந்துள்ளது. அமலாவுடன் ஏற்பட்ட நெருக்கத்தின் காரணமாக, ரஜினிகாந்த் மனைவி லதா... சூப்பர் ஸ்டாரை விட்டு ஒரு வருடம் தனியாக பிரிந்து வாழ்ந்து வந்தாராம்.
பிறகு இது குறித்து லதா ரஜினிகாந்த், பாலச்சந்தருக்கு சொல்ல அவர் கண்டபடி திட்டி ரஜினியை மனைவியுடன் சேர்ந்து வாழ சொல்லியுள்ளார். மேலும் ரஜினிகாந்த் பற்றிய தகவல் திரையுலகில் அதிகம் பேசப்பட்ட வந்த போது, ரஜினிகாந்துடன் பல படங்களில் நடித்த செந்தாமரை மிகவும் கோபமாக,
நீ பண்ணுறது ரொம்ப தப்பு பா... நீ எனக்கு படங்கள் கொடுக்கவில்லை என்றாலும் பரவாயில்லை, மரியாதையா போய் உன்னுடைய மனைவியை அழைச்சிட்டு வந்து வாழு என கூறி கண்டித்தாராம். இது குறித்து செந்தாமரையின் மனைவி கௌசல்யாவிடம் தயாரிப்பாளர் முத்துராமன் கூறியதாக இந்த பேட்டியில் அவர் தெரிவித்துள்ளார்.