ரஜினிகாந்த் பூரண நலம் பெற வேண்டி ரசிகர்கள் தங்கத்தேர் இழுத்து வாழிபாடு
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ரஜினிகாந்த் பூரண நலம் பெற வேண்டி ரசிகர்கள் தங்கத்தேர் இழுத்து வாழிபாடு செய்தனர்.
நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாளையொட்டி அவரது ரசிகர்கள் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தங்கத்தேர் இழுத்து வழிபாடு செய்து ரஜினி பூரண நலம் பெற வேண்டி தங்கத் தேர் இழுத்து வழிபட்டதாக தெரிவித்தனர்.
நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாள் விழா வருகின்ற டிசம்பர் 12ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. ரஜினிகாந்த் பிறந்த நாள் விழாவினைரசிகர்கள் சிறப்பாக கொண்டாடுகின்றனர்.
இதே போல் இந்த ஆண்டும் நடிகர் ரஜினிகாந்த் பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாட முடிவு செய்துள்ளனர். இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அறுபடை வீடுகளில் முதற் படைவீடான சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில்,
நேற்று திருப்பரங்குன்றம் தொகுதி பொறுப்பாளர் கோல்டன் சரவணன் தலைமையில் மதுரை மாநகர பொறுப்பாளர்கள் முன்னாள் காவல்துறை அதிகாரி குமாரவேல் மற்றும் பால தம்புராஜ் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் நடிகர் ரஜினிகாந்த் பூரண நலம் பெற வேண்டி தங்கத்தேர் இழுத்து வழிபாடு செய்தனர்.
அரோகரா கோஷம் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்து திருக்கோவில் வளாகத்தில் உள்ள திருவாச்சி மண்டபத்தை சுற்றி வந்து நிறைவு செய்தனர் தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு ஆராதனை நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து கருத்து தெரிவித்த ரஜினிகாந்த் ரசிகர்கள் நடிகர் ரஜினிகாந்த் பூரண நலம் பெற வேண்டும் என்பதற்காகவும் அவரது பிறந்த நாள் விழாவை எப்படியும் தங்கத் தேர் இழுத்து வழிபாடு செய்வதாக தெரிவித்தனர்.