ஆசையாய் கேட்ட ரஜினிகாந்த் - மறுப்பு தெரிவித்த மணிரத்தினம்
கடந்த மாதம் செப்டம்பர் 30 ஆம் தேதி மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான திரைப்படம் பொன்னியின் செல்வன் இப்படத்தில் நடிகர் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, சரத்குமார்,பார்த்திபன்,விக்ரம் பிரபு, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். ரசிகர்களின் மிகப் பெரிய வரவேற்பை பெற்றுள்ள இத்திரைப்படம் சோழர்களின் வரலாற்றை பேசும் விதமாக இந்த படம் உருவாகியுள்ளது.
இந்த நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்காதது ஏன்? என்ற கேள்விக்கு மணிரத்தினம் பதில் அளித்துள்ளார்.
பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க வேண்டுமென ரஜினிகாந்த் அன்புடன் கேட்டது உண்மைதான். இக்கதை பெரிய கதாபாத்திரங்களை கொண்டது.
எல்லாவற்றுக்கும் மத்தியில் ஒரு மிகப்பெரிய சூப்பர் ஸ்டாரை கொண்டு வருவது சரியாக இருக்காது என்பதால் தான் வேண்டாம் என மறுத்துவிட்டேன் என இயக்குநர் மணிரத்னம் தெரிவித்துள்ளார்.