இதற்குதான் ஐஸ்வர்யா மாமனார் கோபமட்டாரா? இப்போ புரியுது - கமெண்ட் செய்து வரும் நெட்டிசன்கள்
தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து
நடிகர் தனுஷிம், ஐஸ்வர்யாவும் விவாகரத்து பெற்று பிரிந்து செல்வதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர். இந்த அறிவிப்பால், ஒட்டுமொத்த சினிமாத்துறையும், ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த அறிவிப்பை கேட்ட நடிகர் ரஜினிகாந்த், யாரிடம் பேசாமல் வீட்டை விட்டு வெளியே சென்றார். இதனால் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளானார்.
தந்தையிடம் போனில் தொடர்பு கொண்டு பேசிய ஐஸ்வர்யாவை தீட்டித் தீர்த்துவிட்டார். தந்தையின் கோபத்தை கண்டு மிரண்டு போன ஐஸ்வர்யா, கணவர் தனுஷுடன் சேர்ந்து வாழ விருப்பம் தெரிவித்தார்.
ஆனால், நடிகர் தனுஷ் மீண்டும் ஐஸ்வர்யாவுடன் சேர்ந்து வாழ விருப்பம் இல்லை என்று கறாரா தெரிவித்து வந்தார். இதனையடுத்து, இரு குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்களும், நண்பர்களும் இவர்களை சேர்த்து வைக்க முயற்சி செய்து வந்தனர்.
ரசிகர்கள் இருவரையும் ஒன்றாக சேர்ந்து விடுங்கள் என்று சமூகவலைத்தளங்களில் பல மாதங்களாக வேண்டுகோள் விடுத்து வந்தனர்.
நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா சுமூக முடிவு
இந்நிலையில், நடிகர் தனுஷ். ஐஸ்வர்யா விவாகரத்து செய்யும் முடிவை தற்காலிகமாக கைவிடப்போவதாக தகவல் வெளியானது. ரஜினிகாந்த் வீட்டில் நடந்த பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதனால், ரசிகர்கள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கோபமட்ட ஐஸ்வர்யா மாமனார்
சமூகவலைத்தளங்களில் கஸ்தூரிராஜா குறித்த செய்தி வைரலாகி வருகிறது.
அதில், சமீபத்தில் தனுஷ்-ஐஸ்வர்யா விவாகரத்து குறித்து தனுஷின் தந்தையான கஸ்தூரி ராஜாவிடம் நிருபர் கேள்வி எழுப்பினார்.
அப்போது சட்டென கஸ்தூரிராஜா, இதெல்லாம் தேவையில்லாத கேள்வி, இந்த காரணத்தால்தான் செய்தியாளர்களை சந்திப்பதே கிடையாது என்று கோபமாக பேசிவிட்டு சென்றார்.
தற்போது, நெட்டிசன்கள், இதனால்தான் அப்போது கஸ்தூரிராஜா கோபமாட்டாரோ, நல்ல விஷயமாக பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கும்போது, பழசை பேசி கிளற வேண்டாம் என்றுதான் அவர் கோபப்பட்டுவிட்டுச் சென்றுள்ளார். அந்த கோபத்திற்கான காரணம் அப்போது புரியவில்லை. இப்போ நல்லா புரிகிறது என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.