ஆஸ்பிட்டலில் அட்மிட் ஆன ஐஸ்வர்யாவுக்கு, தனுஷ் குடும்பத்திலிருந்து வந்த ஆறுதல் மெசேஜ் - ரசிகர்கள் மகிழ்ச்சி
ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கு, தற்போது கொரோனா பாதிப்பு உறுதியாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஐஸ்வர்யாவுக்கும், நடிகர் தனுஷுக்கும் கடந்த 2004-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இத்தம்பதிக்கு யாத்ரா, லிங்கா என 2 மகன்கள் உள்ளனர்.
தனுஷ், ஐஸ்வர்யாவுக்கு திருமணமாகி 18 ஆண்டுகள் ஆன நிலையில், சமீபத்தில் இருவரும் அறிக்கையை வெளியிட்டு விவாகரத்து செய்து பிரிவதாக அறிவித்தார்கள். விவாகரத்து முடிவுக்கு பிறகு மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்தார் ஐஸ்வர்யா, அதிலிருந்து மீள ஷூட்டிங் பணிகளில் கவனம் செலுத்தி வந்தார்.
இந்நிலையில், தற்போது ஐஸ்வர்யாவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனை தனது இன்ஸ்டாகிராம் பதிவு மூலம் அவர் உறுதிப்படுத்தி செய்தார். அந்த பதிவில், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்தும் எனக்கு கொரோனா பாசிடிவ் வந்துவிட்டது. ப்ளீஸ் அனைவரும் மாஸ்க் போட்டுக்கோங்க, தடுப்பூசி செலுத்திக்கொண்டு பாதுகாப்பா இருங்க.
இந்த வருஷம் இன்னும் என்னவெல்லாம் கொடுக்கப்போகுதுனு பார்ப்போம்” என்று குறிப்பிட்டிருந்தார். தற்போது ஐதராபாத்தில் உள்ள யாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் விரைவில் நலம் பெற வேண்டி ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.
இது குறித்து இன்ஸ்டாகிராமில் நடிகர் தனுஷின் அண்ணன் செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி, “Get well soon love” என்று ஐஸ்வர்யாவுக்கு ஆறுதல் வார்த்தைகள் கூறி இருக்கிறார்.