இப்போ நீங்கதான் எனக்கு.. - அயலானை அழைத்து பாராட்டிய நடிகர் ரஜினிகாந்த்!
அயலான் படத்தை பார்த்துவிட்டு ரஜினிகாந்த் தன்னை போனில் அழைத்து பாராட்டியதாக நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
அயலான்
ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் அயலான். இந்த படத்தில் ரகுல் பிரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

24 ஏ.எம். ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். அயலான் திரைப்படம் பொங்கலை முன்னிட்டு கடந்த 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இந்த படத்தின் வி.எப்.எக்ஸ் காட்சிகள் ஹாலிவுட் படத்திற்கு நிகராக உள்ளதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
மேலும், இதுவரை உலகம் முழுவதும் ரூ.75 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இந்நிலையில் அயலான் படத்தை பார்த்துவிட்டு நடிகர் ரஜினிகாந்த் தன்னை போனில் அழைத்து பாராட்டியதாக நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த் பாராட்டு
இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது "ரஜினிகாந்த் சார் அயலான் படத்தை பார்த்துவிட்டு என்னை போனில் அழைத்து பாராட்டினார்.

நீங்கள் எப்படி வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கிறீர்கள்..? உங்களின் படங்கள் மக்களுக்கு பிடித்து இருக்கின்றன. உங்கள் படங்கள் எல்லாம் எனக்கு ரொம்ப உத்வேகம் அளிக்கிறது என்று சொன்னார். நான், சார் உங்களின் எந்திரன் மற்றும் 2.0 படங்கள்தான் எனக்கு உந்துதலாக இருந்தது என்றேன்.
ஆனால் அவர், இப்போது நீங்கள்தான் என் உத்வேகம் (Inspiration) என்றார். மேலும் மக்கள் உங்களின் பெரிய படங்களை கொண்டாடுகின்றனர். இதே மாதிரி நீங்கள் நல்ல படங்களை மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்று சொன்னார். அது எனக்கு மிகவும் உற்சாகத்தை கொடுத்தது' என்று தெரிவித்தார்.
ஆறு மாதங்களுக்குள் முடிக்கப்படவுள்ள திட்டம் : யாழ்ப்பாணம் உட்பட ஐந்து மாவட்டங்களில் திறக்கப்படவுள்ள அலுவலகங்கள் IBC Tamil
யாழில் ஆட்டத்தை ஆரம்பிக்கும் அநுர..! அடுத்தடுத்து முற்றுகையிடப்படும் ஈ.பி.டி.பி அலுவலகங்கள் IBC Tamil
திருமலையில் வெள்ளை வானில் இரண்டு தமிழ் பெண்கள் கடத்தி படுகொலை : மேலும் 03 கடற்படையினர் கைது IBC Tamil