வெங்கட் பிரபு, எஸ்ஜே சூர்யாவுக்கு போன் செய்த ரஜினிகாந்த்! சிம்புவின் மாநாடு

maanadu
By Fathima Nov 27, 2021 07:22 AM GMT
Report

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு மற்றும் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் மிரட்டியிருக்கும் மாநாடு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது.

இந்தப் படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஏ.சந்திரசேகர், ஒய்.ஜி.மகேந்திரன், வாகை சந்திரசேகர், பிரேம்ஜி, கருணாகரன், மனோஜ் பாரதிராஜா, ஸ்டண்ட் சில்வா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்துக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களை தெரிவித்து வரும் நிலையில், நடிகர் ரஜினிகாந்த் போன் செய்து, வெங்கட் பிரபு மற்றும் சிம்பு ஆகியோரை வெகுவாக பாராட்டினாராம்.

இதனை வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் எஸ்ஜே சூர்யாவும், ரஜினிகாந்த் தனக்கு போன் செய்து வாழ்த்தியதையும் குறிப்பிட்டுள்ளார்.