ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கூறிய தனுஷ் - ரசிகர்கள் பெருமிதம்...!

Dhanush Rajinikanth Birthday
By Nandhini Dec 12, 2022 07:03 AM GMT
Report

நடிகர் ரஜினிகாந்திற்கு முதல் ஆளாக நடிகர் தனுஷ் டுவிட்டர் பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.

தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து

நடிகர் தனுஷிம், ஐஸ்வர்யாவும் விவாகரத்து பெற்று பிரிந்து செல்வதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர். இந்த அறிவிப்பால், ஒட்டுமொத்த சினிமாத்துறையும், ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்தனர். ரசிகர்கள் இருவரையும் ஒன்றாக சேர்ந்து விடுங்கள் என்று சமூகவலைத்தளங்களில் பல மாதங்களாக வேண்டுகோள் விடுத்து வந்தனர்.

இதனையடுத்து, சமீபத்தில் நடிகர் தனுஷ். ஐஸ்வர்யா விவாகரத்து செய்யும் முடிவை தற்காலிகமாக கைவிடப்போவதாக தகவல் வெளியானது. ரஜினிகாந்த் வீட்டில் நடந்த பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதனால், ரசிகர்கள் பெருமகிழ்ச்சி அடைந்தனர். ஆனால், இதுவரை அவர்கள் ஒன்று சேர்ந்ததற்கான தகவல்கள் ஏதும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.

ரஜினிகாந்த் பிறந்தநாள்

நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது 73வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். ரஜினியின் பிறந்தநாளையொட்டி, அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள், ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மேலும், ரஜினிக்கு வாழ்த்து தெரிவிக்க ரசிகர்கள், போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டின் முன்பு அதிகாலை முதலே குவியத் தொடங்கினர். ரஜினிகாந்தின் பிறந்தநாளையொட்டிஅவரது ரசிகர்கள் பல்வேறு ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.

சமூகவலைத்தளங்களில் #ரஜினிகாந்த், #HBDSuperstarRajinikanth, #Jailer ஆகிய ஹேஷ்டேகுகள் ட்விட்டரில் தேசிய அளவில் டிரெண்டாகி வருகிறது.

rajinikanth-birthday-dhanush-wishes

ரஜினிக்கு வாழ்த்து கூறிய தனுஷ்

இந்நிலையில், ரஜினிக்கு முதல் ஆளாக நடிகர் தனுஷ் வாழ்த்து தெரிவித்து டுவிட் செய்துள்ளார். இது குறித்து நடிகர் தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில், பிறந்தநாள் வாழ்த்துக்கள் தலைவா.... என்று தனுஷ் பதிவிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்த டுவிட்டைப் பார்த்த ரஜினி ரசிகர்கள் தனுஷிற்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.

ரஜினிக்கு தனுஷ் வாழ்த்து தெரிவிக்க முக்கிய காரணம் ஒன்று இருக்கிறது. தனுஷ் முதலில் தலைவரின் தீவிர ரசிகனாவார். அதன் பிறகே மருமகன். அதனால் தான் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை பிரிந்து வாழும்போதும் கூட ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருக்கிறார் நடிகர் தனுஷ்.