மறைந்த தன் முதல் தீவிர ரசிகர் முத்துமணியின் மகள் படிப்பு செலவை ஏற்ற ரஜினிகாந்த..வைரலாகும் ஆடியோ பதிவு

muthumanideath rajinikanthfirstbiggestfan educationfordaughter
By Swetha Subash Mar 12, 2022 10:26 AM GMT
Report

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு உலகம் முழுவதும் லட்சக்கணக்கான ரசிகர் மன்றங்கள் உள்ளன.

ஆனால் சில ஊர்களில் உள்ள ரசிகர் மன்றங்கள் அவரது ரசிகர்களுக்கு ஸ்பெஷலானதாக அமையும். அந்த வகையில் ரஜினி நடித்த முதல் படம்

அபூர்வ ராகங்கள் வெளியான போது அவருக்கு மதுரையில் கவர்ச்சி வில்லன் ரஜினிகாந்த் ரசிகர் மன்றம் என்ற பெயரில் ரசிகர் மன்றத்தை தொடங்கிய ஏ.பி.முத்துமணி தான் ரஜினியின் முதல் ரசிகர் என்ற பெருமைக்குறியவர்.

மறைந்த தன் முதல் தீவிர ரசிகர் முத்துமணியின் மகள் படிப்பு செலவை ஏற்ற ரஜினிகாந்த..வைரலாகும் ஆடியோ பதிவு | Rajinikanth Assures Education For Fans Daughter

ஆனால் காலப்போக்கில் நடந்த உள்கட்சி அரசியலால் ரசிகர் மன்ற செயல்பாடுகளில் இருந்து விலகியிருந்த முத்துமணி 2020-ம் ஆண்டு கொரோனா சமயத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டார்.

அப்போது முத்துமணியுடன் போனில் உரையாடிய ரஜினி உடல்நிலையில் அக்கறை செலுத்துமாறு அறிவுறுத்தினார். தொடர்ந்து சமீபத்தில் மீண்டும் உடல்நலம் குறைவால் சிகிச்சைப் பெற்று வந்த அவர் சில தினங்களுக்கு முன்பு காலமானார்.

இந்த தகவல் தமிழகம் முழுவதும் உள்ள ரஜினி ரசிகர்ளை கவலையில் ஆழ்த்தியது.

இந்நிலையில் தற்போது ரஜினிகாந்த் முத்துமணியின் மனைவியிடம் தொலைபேசியில் பேசி தனது ஆறுதலை தெரிவித்துள்ளார்.

மேலும் உடல்நிலை காரணமாகவே நேரில் வர இயலவில்லை எனவும் உடல்நலம் பெற்று மீண்ட பின்னர் நேரில் சந்திப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் 10-ம் வகுப்பு படித்து வரும் முத்துமணியின் மகளின் படிப்பு செலவையும் தான் ஏற்றுக்கொள்வதாக ரஜினி தெரிவித்துள்ளார்.

முத்துமணியின் மனைவியிடம் ரஜினி பேசிய ஆடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.